வியாழன், 21 பிப்ரவரி, 2019

அமாவாசை :அவனுங்க வாரிசை மனுதர்ம அடிப்படையில் படிக்கவிடாம பண்ணிட்டோம்

A Sivakumar : என்ன மணி...ஏன் குறுகுறுன்னு பார்க்குறே
உங்களை என்னவோன்னு நினைச்சேன்... ராஜதந்திரின்னு பேர் வாங்கிட்டீங்கண்ணா
அடேய் மணியா... டெல்டாவுல 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் ஒரே ராத்திரியில வீதிக்கு வந்தப் பிறகும் நாம என்ன ஸ்டாலின் மாதிரி அவங்களை நேரில் போயா பார்த்தோம்? ஹெலிகாப்டரில் நாளை நமதே பாட்டு கேட்டுக்கிட்டு தானே போனோம்
அப்படிப்பட்ட நம்மளையே பிடல் சேன்னு சொன்னவனுங்க தான் இவனுங்க
கோர்ட்டே தலையில் பலவாட்டி கொட்டியும் உள்ளாட்சி தேர்தலை நடத்தினா தோத்துடுவோம்ன்ற உண்மை தெரிஞ்சு அதை நடத்தாம ஊரை வாயில் போட்டுக்கிறவங்க நாம
நம்மளையே இவனுங்க ராஜதந்திரின்னு எழுதுறானுங்கன்னா இவனுங்களோட தரத்தை பார்த்துக்கோ
அட நம்ம அதிமுககாரங்களை விடு. வேற வழியில்லாதவனுங்க.
நமக்கு வாய்த்த நடுநிலை மாதிரி நம்ம ஜெயலலிதாக்கே வாய்க்கலைன்னா பாரேன்.
பாஜகவோட சேர்ந்து நாம உருவுறது அவனோட கோமணமாயிருந்தாலும் அதை நாம திமுக மீது தூக்கி எரிஞ்சிட்டாப் போதும்
சில்லறைப்பசங்க கைதட்டிக்கிட்டே ரசிப்பானுங்க
இதை நீ நல்லாப் புரிஞ்சுக்கனும்

இப்போ பாரு நேத்து ராத்திரி...இந்த வருசமே 5வது 8வதுக்கு பொதுத் தேர்வுன்னு அறிவிச்சிட்டோம். இது பிப்ரவரி...எப்படி மார்ச் ஏப்ரலில் இதை நாம நடத்தி...தேர்வு முறைகள் புரிஞ்சு...பசங்க பாசாகி...மேல வருவானுங்கன்னு நம்மளை கேள்வி கேட்க வேண்டியவன் பூரா ஸ்டாலின் வேட்டிக்குள்ளே குத்தவச்சு உட்கார்ந்துக்கிட்டு இருக்கானா இல்லையா???
இவனுங்களுக்கு நாமளே அதிகம்னு சொல்றேன் நான்
இந்த கிழப்பைய பெரியாரும், அண்ணாவும், காமராசரும், கலைஞரும், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மற்ற விசயங்கள்ள எப்படியாே...கல்வி விசயத்தில் ஒரே மாதிரி தான் சிந்திச்சாங்க
அதனால ஸ்கூலுக்கு போய் படிப்பை பார்த்த 10 பேருல 4 பேர் தான் இப்போ நம்மளை கேள்வி கேட்குறான்
அவனுங்க வாரிசை மனுதர்ம அடிப்படையில் படிக்கவிடாம பண்ணிட்டோம்னு வைய்யு அதுக்கப்புறம் தமிழ்நாடும் இன்னொரு உபியாே, பீகாரோ தான். நமக்கும் நம்ம டெல்லி முதலாளிங்களுக்கும் ரொம்ப வசதியா போயிடும்
என்னை புகழுறத நிறுத்திட்டு உன் பையனை தேர்தல்ல நிறுத்தினோம்னா ஜெயிக்க வைக்குற வேலையில் இறங்கு போ

கருத்துகள் இல்லை: