புதன், 20 பிப்ரவரி, 2019

தோழர் முகிலனுக்கு என்ன நடந்தது? அவர் வெளியிட்ட தூத்துக்குடி கொலைகள் ..ஆவணப்படம் .. வீடியோ

வினவு: முகிலன் வெளியிட்ட ஸ்டெர்லைட் – காவல்துறை படுகொலைகளுக்கும்
முகிலன் வெளியிட்ட வீடியோவிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது! ன்பார்ந்த தமிழக மக்களே !
கடந்த மே-22, 2018 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு, வரலாறு காணாத அரசு வன்முறை நிகழ்த்தப்பட்டது. மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர்  உள்ளிட்ட அமைப்புகளும், வழக்கறிஞர்கள் வாஞ்சி நாதன், அரிராகவன் மற்றும் மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலரும்  குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டோம். அதன்பின் பல்வேறு உண்மைகள் வெளிவந்தன
ஆனால், மே-22, 2018 காலை 11.45 – 12.30 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே என்ன நடந்தது? என்பது தற்போதுவரை மர்மமாகவே இருந்தது.
தற்போது முகிலன் வெளியிட்டிருக்கும் காணொளித் தொகுப்பு, மர்மத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சி, உண்மைகளை உரத்துச் சொல்லியுள்ளது.

முகிலன் வீடியோ மீது விசாரணை நடந்தால், தென்மண்டல காவல்துறை தலைவர் உட்பட பலர் சிறை செல்வது உறுதி. முக்கியமாக 18.02.2019-ல் உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணைக்குத் தடை கோரிய தமிழக அரசின் வழக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஏற்பாட்டில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு காலின் கன்சாவேல்ஸ்  உள்ளிட்டோரின் வலுவான வாதத்தால், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதியக் கோரி மக்கள் அதிகாரம் தோழர்கள், கூட்டமைப்பினர், சி.பி.எம். தோழர்கள், சம்பவத்தைப் பார்த்த மக்கள் உள்ளிட்டோர் புகார் அனுப்பி அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ.யும் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: