சனி, 24 மார்ச், 2018

சந்தையூரில் இயக்குனர் பா.ரஞ்சித், ஆதவன் தீட்சண்யா கள ஆய்வு ! ... சமரச முயற்சி ?

இயக்குனர் ப.ரஞ்சித் : படிநிலை சாதி அமைப்பில் ஒரு சாதிக்கு கீழாக ஒரு சாதி உள்ளது, என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அதை இங்கு வந்து பார்த்த பிறகு தயக்கமின்றி உறுதியாகிவிட்டது. ஆனால் இது தலித்துக்களுக்குள் நிலவுவதுதான் மிகவும் வேதனையான உள்ளது,
ஆ.நாகராசன் : சந்தையூர் சுவர் தொடர்பாக..
பார்வைக் கோளாறை சரிசெய்ய அம்பேத்கர் பெரியார் கண்ணாடியை அணியுங்கள்.
""'""""""""""""""""""""""
சந்தையூர் சுவர் தொடர்பாக.. நேற்று.. 19.3.2018 தோழர் கு.இராமகிருட்டிணன்,
தோழர் ஆதவன்தீட்சண்யா, இயக்குனர் ப.ரஞ்சித் ஆகியோர்கள், சந்தையூர் அருந்ததியர் மற்றும் பறையர் சமூகத்தவரை தனித்தனியாக சந்தித்து கருத்துக்கள் கேட்டுள்ளனர். கருத்து சேகரிப்பில் பறையர் சமூக மக்கள் சுவரை இடிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனராம். இதே போன்று சுவரை இடித்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அருந்ததியர் மக்களும் உறுதியாக உள்ளனராம். கு.இராமகிருட்டிணன் சந்தையூருக்கு மிகவும் காலம் தாழ்த்தி வந்ததற்கு முதலில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார், மேலும் அவர் பேசிய உரையின் சாரம், படிநிலை சாதி அமைப்பில், அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக அழுத்தப்பட்டு கிடக்கும் அருந்ததியர் பக்கம் நியாயம் உள்ளது. இதில் அருந்ததியர்களை அழுத்திக் கொண்டிருக்கும், மூட்டை எதுவாக இருந்தாலும் அதை தூக்கி எறிய வேண்டியது, மட்டும்தான் உண்மையான சமூக நீதியாக இருக்கமுடியும், ஆகவே சுவரை இடிப்பதே சரியானது என்றார்.


ஆதவன் தீட்சண்யா
""""""'''''''''''''''''''""""""""""'""'
இவரும் சுவரை இடிப்பதே சரியானது என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ப.ரஞ்சித்
"""""""""""""""""""""""""""""""
படிநிலை சாதி அமைப்பில் ஒரு சாதிக்கு கீழாக ஒரு சாதி உள்ளது, என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அதை இங்கு வந்து பார்த்த பிறகு தயக்கமின்றி உறுதியாகிவிட்டது. ஆனால் இது தலித்துக்களுக்குள் நிலவுவதுதான் மிகவும் வேதனையான உள்ளது, எது எப்படியோ, இப்படியான சிக்கலுக்கு இந்த சுவர்தான் காரணம் என்றால், அதை இடிப்பதுதான் சரியானது. என்று கூறியதோடு சுவரை இடித்துவிட்டு அந்த பொதுஇடத்தில் சமூகக்கூடம் அல்லது கல்விக்கூடம் போன்று ஏதாவது ஒன்றை இரு சமூகமும் பயன்படுத்தும் விதமாக இரு சமூக சம்மதத்தோடு கட்டுவதற்கு முன்வந்தால் நல்லதாக அமையும், அதை நானே முன் நின்று கட்டித்தரவும் தயாராக உள்ளேன் என்று அழுத்தமாக குறிப்பிட்டு உள்ளாராம். அதே நிலையில் அருந்ததியர் மக்கள் இப்படி ஆபத்தான காட்டு மலையில் இருந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளுடன் மாதக்கணக்கில் போராடுவது மிகவும் வேதனையாகவும், அதிச்சியாகவும் உள்ளது. போராட்டம் நியாமானது தான், ஆனால் வடிவத்தை மாற்ற முயற்சி எடுங்கள் என்றாராம்.

இவர்களதி கண்களுக்கு, தீண்டாமைச்சுவராக, அல்லது சிக்கலுக்குறிய சுவராக தெரியும் போது, சிறுத்தைகளின் கண்களுக்கு மட்டும் எப்படி? கோவில் பாதுகாப்பு சுவராக தெரிகிறது. அப்படி என்றால் பார்வையில் தான் கோளாறு.

இந்த பார்வைக் கோளாறை சரிசெய்ய அம்பேத்கர் பெரியார் கண்ணாடியை அணிந்தால் சரியாகிவிடும்.

ஆ.நாகராசன்

கருத்துகள் இல்லை: