@RahulGandhi
: When the RSS & BJP encouraged the tearing down of Lenin statues in Tripura, they signalled their cadres to destroy statues of those who opposed their ideology, like Periyar, the great social reformer who fought for the Dalits. His statue too was destroyed today in Tamil Nadu.
நக்கீரன் ச.ப.மதிவாணன் : ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் தூண்டுதல்களால் முக்கியத் தலைவர்களின் சிலைகள் உடைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் சோவியத் புரட்சியாளர் லெனின் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. இது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. இந்நிலையில், புதுக்கோட்டை
மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று இரவு இந்த பெரியார் சிலையின் தலைப்பகுதியை மர்மநபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர்.
சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டபோது அதை ஆதரித்தனர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள். அதைத் தொடர்ந்து கொள்கைகளை எதிர்க்கும், பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள், தலித்துகளின் உரிமைகளுக்காக போராடியவர்களின் சிலைகளை உடைக்குமாறு தங்களது ஆதரவாளர்களை அவர்கள் ஏவிவிடுகின்றனர். தற்போது பெரியாரின் சிலை தமிழ்நாட்டில் உடைக்கப்பட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக