வெள்ளி, 23 மார்ச், 2018

தமிழக போலீஸ் அதிகாரிகளின் வீட்டு ஆர்டர்லியாக போலீஸ் காவலர்கள் ....

Shankar A :. கடலூர் மாவட்ட
எஸ்பி.சி.விஜயக்குமார் இல்லத்தில் 9 ;
tஎஸ்பி.விஜயக்குமா
சுனில் குமார் சிங்
ஆயுதப்படை காவலர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். தோட்ட வேலை, சமையல், ஓட்டுநர் உட்பட. நேற்று, ஆயுதப்படை காவலர்களை, ஆயுதப் படையில் சென்று ரிப்போர்ட் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். உயர்
அதிகாரிகளின் உத்தரவு ஏதுமின்றி, தானாகவே இந்த முடிவை எடுத்த எஸ்பி.விஜயக்குமாருக்கு வாழ்த்துக்கள்.
பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள சுனில் குமார் சிங் ஐபிஎஸ் வீட்டில் வேலை பார்ப்பவர்கள்
சமையல்
1) இருதய மணாளன்
2) குப்புசாமி
3) ஆரோக்கிய ராஜ்

மேசை நாற்காலி, அலமாரி தூசி தட்ட
4) ஜான் பால்
5) கோபிநாத்
6) பாலமுருகன்
தரை துடைத்தல் மற்றும் கழுவுதல்
7) லென்சன்
8) பிரபு
மேடம் ட்ரைவர்
9) தனஞ்செழியன்
Adam Driver அய்யாவின் வாகன ஓட்டுனர்
10) மணிகண்டன்
11) பார்த்திபன்
 12) தியாகு
பாதுகாப்பு காவலர்
13 சரவணன்

தினகரன் :சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளில், எத்தனை பேர் ஆர்டர்லியாக உள்ளனர் என்ற பட்டியல் வழங்க வேண்டும் என்று டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் அனைத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 660 முதல் 700 பேர் பணியிலிருந்து விலகியுள்ளனர். மேலும், கடந்த 2010 முதல் நடப்பாண்டு வரை 182 போலீசார் தற்கொலை செய்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் பணியின் போது போலீசார் உயிரிழப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதா என கேள்விகளை நீதிபதி எழுப்பினார். அதற்கு வரும் 22ம் தேதி விளக்க அறிக்கை அளிக்க தமிழக டிஜிபி.டி.கே.ராஜேந்திரனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து, தமிழக டிஜிபி.க்கள், ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், லஞ்ச ஒழிப்புப் பிரிவு, மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாநில குற்ற ஆவணக்காப்பகம், போலீஸ் அகாடமி, சிபிசிஐடி, ஆயுதப்படை, பொருளாதார குற்றப்பிரிவு, அமலாக்கப்பிரிவு, ரயில்வே, உள்ளிட்ட அனைத்து பிரிவு உயர் அதிகாரிகளுக்கும் நேற்று அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பினார்.அந்த அறிக்கையில் டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் காவல் பணியிலிருந்து விலகிய போலீசார் எத்தனை பேர்? கடந்த 10 ஆண்டுகளில் பணியிலிருந்து எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்? பல்வேறு காரணங்களுக்காக பணி நேரத்தில் எவ்வளவு போலீசார் இறந்துள்ளனர்? கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட போலீசார் எவ்வளவு பேர்?  என்ற பட்டியலை ஆண்டு வாரியாக அனைத்து பிரிவு காவல் துறை அதிகாரிகளும் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

15 அதிகாரிகளுக்கு 90 டிரைவர்கள்
இதற்கிடையில், தமிழகத்தில் போலீசார் தற்போது பல வாட்ஸ் அப் குழுக்களை வைத்துள்ளனர். அதில், டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர்கள் முதல் மாவட்ட எஸ்பிக்கள் வரை உள்ள அதிகாரிகள் வீடுகளில் எவ்வளவு போலீசார் வீட்டு வேலை செய்கின்றனர். டிரைவர்கள் எவ்வளவு பேர், அலுவலகத்தில் எவ்வளவு போலீசார் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்ற பட்டியல்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் டிஜிபி, ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், உதவி ஐஜிக்கள் என 15 அதிகாரிகளுக்கு மட்டும் தலா 6 டிரைவர்கள், 4 வெயிட்டிங் காவலர், வீட்டில் உள்ள அலுவலகத்துக்கு 2 போலீசார் என மொத்தம் 170 போலீசார் பணியாற்றுகின்றனர்.

அதில், டிரைவர்கள் 90 பேர், வெயிட்டிங் காவலர் 40 பேர், வீட்டு அலுவலக டிரைவர் 30 பேர் பணியாற்றுகின்றனர் என்ற பட்டியல்களும் வெளியாகியுள்ளன. இதைத் தவிர, கம்ப்யூட்டர் பணிக்கான காவலர் 100, பாதுகாப்பு பணிக்கு 140 பேர், கட்டுப்பாட்டு அறையில் 15 பேர், கேன்டீனில் 10 பேர் என 265 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலையே இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: