: Mathi - Oneindia Tamil
டெல்லி: 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு
தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு
முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஜ்யசபாவில் ஆளும் பாஜகவுக்கு 58 எம்.பிக்கள்தான். ஆனால் எதிர்க்கட்சிகள்
பெரும்பான்மையாக உள்ளன. ராஜ்யசபாவில் தனிப் பெரும்பான்மைக்கு 126
எம்.பிக்கள் தேவை. இந்த நிலையில் 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா எம்.பி.
பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
அதிகபட்சமாக உ.பியில் 10, மகாராஷ்டிராவில் 6, பீகாரில் 6,
மத்தியபிரதேசத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 33
எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர்.
எஞ்சிய 25 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. உத்தப்பிரதேசம், மேற்கு வங்கம்,
கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில்தான் இந்த 25
எம்.பி. பதவி இடங்களுக்கான போட்டி நிலவியது.
58 இடங்களுக்கான தேர்தல்களில் பாஜக 19;
காங்கிரஸ் 10; திரிணாமுல் காங்கிரஸ்
4; பிஜூ ஜனதா தளம் 3; தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 3 இடங்களிலும்
வென்றுள்ளன
1
| Party | Elected unopposed | Newly Elected |
Total Seats (58)
|
---|---|---|---|---|
2
| BJP | 16 | 12 | 28 |
3
| CONG | 5 | 5 | 10 |
4
| TDP | 2 | 0 | 2 |
5
| YSRCP | 1 | 0 | 1 |
6
| JD(U) | 2 | 0 | 2 |
7
| RJD | 2 | 0 | 2 |
8
| Shiv Sena | 1 | 0 | 1 |
9
| NCP | 1 | 0 | 1 |
10
| BJD | 3 | 0 | 3 |
11
| BSP | 0 | 0 | 0 |
12
| SP | 0 | 1 | 1 |
13
| JDS | 0 | 0 | 0 |
14
| TRS | 0 | 3 | 3 |
15
| TMC | 0 | 4 | 4 |
16
| OTH | 0 | 0 | 0 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக