மின்னம்பலம் : “காங்கிரஸ்
கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுப்பாளர் பதவியிலிருந்து நக்மா
நீக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தி திடீரென இப்படியான ஒரு அறிவிப்பை
வெளியிட்டிருக்கிறார். இதன் பின்னணியில் இருப்பது வாட்ஸ் அப்
பஞ்சாயத்துதான்!
மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் அடங்கிய வாட்ஸ் அப் குரூப் ஒன்று இருக்கிறது. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் என்ற பெயரில் இந்த வாட்ஸ் அப் குரூப் செயல்பட்டுவருகிறது. மகிளா காங்கிரஸின் செயல்பாடுகள், கூட்டங்கள், அறிக்கைகள் என அவர்கள் தொடர்புடைய அத்தனையும் இந்த குரூப்பில் பகிரப்படுமாம். இந்த குரூப்பில் நக்மாவும் இருக்கிறார். தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவியான ஜான்சி ராணியும் இதில் இருக்கிறார்.
நக்மாவுக்கும், ஜான்சி ராணிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த குரூப்பில் நக்மா ஒரு மெசேஜ் பதிவிட்டிருக்கிறார். ‘நான் தமிழ்நாட்டுக்குள் எந்த ஊருக்கு வந்தாலும் அங்கே என்னை வரவேற்க, ரயில்வே ஸ்டேஷனுக்கோ ஏர்போர்ட்டுக்கோ மகிளா காங்கிரஸ் ஸ்டேட் பிரஸிடண்ட் வரணும்’ என்பதுதான் அந்த மெசேஜ்.
அதற்கு சில நிர்வாகிகள், ‘வெல்கம் மேடம்...’ என ரிப்ளை போட்டிருக்கிறார்கள். மாநிலத் தலைவியான ஜான்சி ராணியோ, ‘அப்படியெல்லாம் ஓடி வந்து நிற்க முடியாது. நீங்க வரும் ஊரில் நான் இருந்தால் வந்து பார்ப்பேன். இல்லை என்றால் வர மாட்டேன்..’ என்று ரிப்ளை போட்டிருக்கிறார்.
கடுப்பாகிப்போன நக்மா, ‘எனக்கு தங்குவதற்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் புக் பண்ண வேண்டிய பொறுப்பும் ஸ்டேட் பிரஸிடண்ட்க்குதான் இருக்கு’ என்று ஒரு மெசேஜ் போட்டிருக்கிறார். அதற்கும் ஜான்சி ராணி உடனே ரிப்ளை போட்டாராம். ‘என் வசதிக்கு எங்கே ரூம் போட முடியுமோ அங்கேதான் போடுவேன்’ என்பதுதான் அந்த ரிப்ளை. அதற்கு, இங்கே டைப்பிங் செய்ய முடியாத வார்த்தைகளை ரிப்ளையாகப் போட்டிருக்கிறார் நக்மா. பதிலுக்கு, ஜான்சி ராணியும், நக்மாவை பர்சனலாகச் சில விஷயங்களைக் குறிப்பிட்டு, ‘உன் யோக்கியதை எனக்குத் தெரியாதா?’ என மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இப்படியாக நக்மாவுக்கும் ஜான்சி ராணிக்கும் இடையில் வாட்ஸ் அப் யுத்தம் வெடித்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் நக்மா, தமிழ்நாடு மகிளா காங்கிரஸில் உள்ள இன்னொரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவ என்ன தொழில் பண்றான்னு எனக்குத் தெரியும்’ என்று சொல்ல, சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணும், டென்ஷனாகி நக்மாவுக்கு எதிராக மெசேஜ் தட்டியிருக்கிறார். இப்படியாக ஒரு நாள் முழுக்க குழாயடிச் சண்டையைவிட அதிகமாக வாட்ஸ் அப்பில் சண்டை நடந்திருக்கிறது. அதில் பல மெசேஜ்கள் ஆன்லைனில் ஏற்ற முடியாத அளவுக்கு அசிங்கமானவையாம்.
அந்த குரூப்பில் இருந்த ஒரு நிர்வாகி இதையெல்லாம் அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து ராகுல் காந்திக்கு அனுப்பிவிட்டாராம். அதைப் பார்த்து டென்ஷன் ஆன, ராகுல் காந்தி உடனடியாக நக்மாவைத் தமிழ்நாடு, புதுவை பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார். மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவியான ஜான்சி ராணி மீதும் அடுத்த நடவடிக்கை பாயுமாம். அந்தப் பொறுப்புக்கு வேறு ஒரு நபரைத் தேர்வு செய்துவிட்டு அவரை அதிலிருந்து விடுவிப்பதுதான் ராகுலின் திட்டமாம்.
இந்தத் தகவல் அறிந்து ஜான்சி ராணி உடனடியாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் ஓடியிருக்கிறார். விஷயத்தைச் சொல்லிக் கதறியிருக்கிறார். ‘நக்மா பேசியதாலதான் நான் பேசினேன். நீங்கதான் ராகுல்கிட்ட பேசணும்...’ என்று கேட்டிருக்கிறார். ‘நான் சொல்லி உடனே ராகுல் கேட்க மாட்டாரு... இருந்தாலும் பேசிப் பார்க்கிறேன்.’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது ஃபேஸ்புக். “நாஞ்சில் சம்பத் கிளம்பியதிலிருந்து, டென்ஷனாகவே இருக்கிறாராம் டிடிவி தினகரன். தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பெங்களூரு புகழேந்தி மூவரையும் வீட்டுக்கு அழைத்துப் பேசியிருக்கிறார். ‘அப்பாயின்மெண்ட் வாங்கிட்டுத்தான் வரணும்னு நான் எப்போதாவது சொல்லியிருக்கேனா? என்னை சந்திக்க விடாமல் அவரை யாரு தடுத்தாங்க? என்னோட செகரெட்டரி ஜனாவுக்கு ஒரே தடவை போன் பண்ணியிருக்காரு. அவன் என்கிட்ட சொல்லாமல் விட்டுட்டான். அதுக்கும் அவனைப் பிடிச்சு சத்தம் போட்டுட்டேன். வீட்டுக்கு வந்தால் நான் யாரையும் பார்க்காமல் அனுப்பியதே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். என்னைப் பார்க்க முடியலைன்னு அவரு சொன்னது வருத்தமா இருக்கு. என்னைப் பார்க்கணும்னு இனி யாரு கேட்டாலும் உடனே வரச் சொல்லுங்க. இதைக் காரணமா சொல்லிட்டு யாரும் நம்மை விட்டுப் போறதுல எனக்கு உடன்பாடு இல்ல...’ என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்” என்ற ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு, சைன் அவுட் ஆனது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக