செவ்வாய், 20 மார்ச், 2018

ரஷ்யா: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதினுக்கு குவியும் வாழ்த்து

BBC :ரஷ்யாவின் அதிபராக மீண்டும் விளாடிமர் புதின் வெற்றி பெற்றதற்கு
உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை மேற்கத்திய தலைவர்கள் யாரும் புதின் வெற்றிக்கு வாழ்த்தவில்லை.
"வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரஷ்யாவுடன் நல்ல உறவு நிலவி வருவதாக" சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார்.
கசகஸ்தான், பெலாரஸ், வெனிசுவேலா, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளும் புதினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் மேற்கத்திய தலைவர்கள் யாரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஞாயிறன்று நடைபெற்றஅதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றிப்பெற்றார். அவரின் இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது; வெற்றியை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் ரஷ்யாவின் அதிபராக செயல்படுவார் விளாடிமிர் புதின்.
1999ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை பிரதமராகவோ, அதிபராகவோ ஆண்டு வரும் புதின், 76 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.
முக்கிய எதிர்கட்சி தலைவரான அலக்சே நவால்னி தோல்வியை சந்தித்துள்ளார்.
தேர்தலின் முதல்கட்ட முடிவுகளை தொடர்ந்து மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் பேசிய புதின், "கடந்த சில ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளை வாக்காளர்கள் அங்கீகரித்துள்ளனர்" என தெரிவித்தார்.

அடுத்த ஆறு ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனக்கு 100 வயது ஆகும் வரை நான் ஆட்சி செய்வேன் என்றா?! இல்லை. என சிரித்துக் கொண்டே அவர் பதிலளித்தார்.
2012ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 64 சதவீத வாக்குகளை காட்டிலும் இந்த முறை அதிக வாக்குகளை பெற்றுள்ளார் புதின்.
புதினுக்கு அடுத்தப்படியாக பெரும் பணக்காரரும், கம்யூனிஸ்டுமான பாவல் குருடினின் சுமார் 12 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில், புதின் 60சதவீத வாக்குகளை பெற்றிருந்ததாக தெரியவந்தது.
புதினின் பிரசாரம், அவருக்கு அதிகப்படியான அதிகாரத்தை வழங்கும் வகையில் அதிகப்படியான வாக்குகளை பெற்றுதரும் என நம்பப்பட்டது.
அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்களில் தொலைக்காட்சி தொகுப்பாளரான கேசெனியா சோப்சக், 2 சதீவீதத்திற்கும் குறைவான வாக்குகளும், மூத்த தேசியவாதி விளாடிமிர் சிரினோஃப்ஸிகி 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளும் பெற்றிருந்தனர்.புதினின் பிரசாரக் குழு இது ஒரு "வியக்கத்தக்க வெற்றி" என தெரிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகளுக்கு அருகில் இலவச உணவுகளும், உள்ளுர் கடைகளில் தள்ளுபடிகளும் வழங்கப்பட்டன.
வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளில் ரஷ்யா முழுவதும் சில நகரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிகிறது.
பல வீடியோக் காட்சிகளில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளை வாக்குசீட்டுகள் கொண்டு நிரப்புவது போலவும் உள்ளது.
ஆனால் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முறைகேடுகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: