
பீஜிங்: பதன்கோட் தாக்குதல் தொடர்பாக ஜ.நா., சபையில் இந்தியாவிற்கு ஆதரவளிக்காமல் சீனா முட்டுக்கட்டை போடுகிறது.
இந்தியாவின் பதன்கோட் விமான தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பயங்கரவாதிகள்
தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தலைவர் மசூது அசார், இவரை பயங்கரவாதியாக அறிவிக்க கோரி இந்தியா, ஐ.நா., பாதுகாப்பு குழுவின் 1267 கமிட்டியிடம் கோரியிருந்தது. இது கடந்த மார்ச் மாதமே விவாத்திற்கு வந்த போது சீனாவின் ஒத்துழைப்பு இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் விவாதத்திற்கு வந்த நிலையில் சீனா மீண்டும் ஒத்துழைப்பு தர மறுத்தது.
ஜெய்ஷ்- இ- முகம்மது அமைப்பின் தலைவர் மசூது அசாரை ஐ.நா., பாதுகாப்பு குழுவின் 1267 கமிட்டியிடம் பட்டியலிடுவதன் மூலம் அவரது சொத்துக்களை முடக்கவும், வெளிநாட்டு பயணங்களை தடை செய்யும் முடியும், இதனால் இந்தியா இம்முயற்சியில் தீவிரமாக இறங்கியது. ஜ.நா.,வில் உறுப்பினராக உள்ள 15 நாடுகளில் சீனாவை தவிர மற்ற 14 நாடுகளும் மசூது அசாரை ஐ.நா., பாதுகாப்பு குழுவின்1267 கமிட்டியில் பட்டியலிட ஒப்புதல் அளித்துள்ளனர் . சீனாவின் இந்த முட்டுகட்டையால் இது குறித்து முடிவெடுக்க மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சீனா வின் செய்தி தொடர்பாளர் ஜிங் சூங் கூறுகையில் ‛‛ ஐ.நா., பாதுகாப்பு குழுவின் 1267 கமிட்டியில் பட்டியலிடுவதில் சீனா எப்பொழுதும் ஓரே நிலைப்பாடுடன் இருக்கிறது. வழுவான ஆதரங்களில் அடிப்படையிலேயே சீனா ஒத்துழைப்பு அமையும், இந்த விஷயத்தை பொருத்தவரை பல கோணங்களில் ஆராய வேண்டியது உள்ளது. இதற்கு சில காலம் தேவைப்படலாம்'' என தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த மார்ச் மாதம் ஐ.நா., பொருளாதார தடை குழுவில் 26/11 மும்பை தாக்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையிலும், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் என்.எஸ்.ஜி.,(நியூகிளியர் சப்ளையர் குரூப்) நுழைவு முயற்சிக்கும் சீனா முட்டுகட்டையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தினமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக