புதுடில்லி;'பார்ச்சூன்' பத்திரிகை வெளியிட்டுள்ள, உலகின் தலைசிறந்த, 50 தலைவர்கள் பட்டியலில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்இடம்பெற்றுள்ளார். மூன்றாவது ஆண்டாக, பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், 42வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், இவர் தான். உலகிலேயே, மிகவும் மாசுள்ள நகரமாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள டில்லி யில், வாகனங்களின் பதிவு எண்கள் அடிப்படையில், போக்குவரத்தில் மாற்றம் செய்ததன்மூலம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார் கெஜ்ரிவால்,'' என, அவரை தேர்ந்தெடுத்ததற்கான காரணமாக, பார்ச்சூன் பத்திரிகை கூறியுள்ளது.
அமேஸான் தலைமைச் செயல் அதிகாரி ஜெப் பெசாஸ், இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். போப் பாண்டவர் பிரான்சிஸ், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கெல், உள்ளிட்டோர், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக