
நிலையத்தை, தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் கோட்டை விட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், என்.டி.பி.சி., நிறுவனம், 'அல்ட்ரா மெகா சோலார் பவர்புராஜக்ட்' என்ற பெயரில், பிரம்மாண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் இடம் தேடி வந்தது. இறுதியில், ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தில், 1,000 மெகாவாட் திறன் உடைய, சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், அம்மாநில மின் வாரியத்திற்கு குறைந்த விலையில் விற்கப்பட உள்ளது.
இது குறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழ்நாடு மின் வாரியம், தனியாரிடம் இருந்து, 1யூனிட் சூரிய சக்தி மின்சாரத்தை, 7.01 ரூபாய்க்கு வாங்கி வருகிறது. என்.டி.பி.சி., மின் நிலையத்தை, தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், மின் வாரியத்திற்கு, குறைந்த விலையில் அதிக மின்சாரம் கிடைத்திருக்கும்.தமிழகத்திற்கு நல்ல வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு, அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
வல்லுார் மின் நிலையம்: தமிழ்நாடு மின் வாரியம், என்.டி.பி.சி., நிறுவனத்துடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில், தலா, 500 மெகாவாட் திறனில், மூன்று அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் அமைத்துள்ளது. இதேபோல், கூட்டு சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம் என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் - தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக