வியாழன், 14 ஜனவரி, 2016

எம் எஸ்.சுப்புலட்சுமியின் பாடல் காப்பிரைட்...அவா வித்துட்டா...இனி இலவசமா கேட்கமுடியாது...

பலரும் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பிராமணர் என்று தவறாக
எண்ணுகின்றனர் . உண்மையில் சுப்புலட்சுமி ஒரு இசைவேளாளர் குடுபத்தை சேர்ந்தவர், வீணை வாத்திய விற்பன்னர்  மதுரை சண்முகவடிவு அவர்களின் மகள்தான் சுப்புலக்ஷ்மி.  இவரின்  இசை திறமையையும் அழகையும் அப்படியே கபளீகரம் செய்த சதாசிவம் அய்யர் இரண்டாவது திருமணமாக சுப்புலட்சுமியை திருமணம் செய்தார் .அவரின் பணத்தில்தான் கல்கி பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது, அந்த பத்திரிக்கை பின்பு பிராமண பத்திரிகையாகவே  உருமாறி போனது வேதனை. தமிழர் வரலாறும் முழுவதும் இப்படிபட்ட சம்பவங்கள் மறுபடியும் மறுபடியும் நடந்துகொண்டே வருகிறது,இப்போது
காசுக்கு ஆசைப் பட்டு எம்.எஸ்.குடும்பம் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற பக்தி பாடல்களை விற்று விட்டது மிக கேவலமான செயல் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற பக்தி பாடல்களை மறைந்த பாடகி எம்.எஸ். அவர்கள் பாடி அது இன்றும் பல கோடி இந்து மக்கள் வீட்டில் காலையில் ஒலிக்கிறது.

வெளிநாட்டில் வாழும் என்னை போன்றவர்களுக்கு இணையத்தில் இருந்து ஒலிக்கவிடுவோம். ஆனால் எம் எஸ் அவர்களின் பாடல்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள நிறுவனம், இணையத்தில் இருந்து அவரின் பாடல்களை முடக்கியுள்ளது.
அரசு இந்த பாடல்களின் உரிமையை அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கி பொதுவெளியில் இலவசமாக கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும்.
காசுக்கு ஆசைப் பட்டு எம்.எஸ்.குடும்பம் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற பக்தி பாடல்களை விற்று விட்டது மிக கேவலமான செயல்.vadhini.com

1 கருத்து:

Durai Ilamurugu சொன்னது…

இந்த நூலில் இது வரவில்லை.எல்லா விற்பனை உரிமைகளையும் திருப்பதி தேவஸ்தானத்தின் கையில் உள்ளதாக கூறப்படுகிறது. சம காலத்திய வரலாறு இப்படி மறைக்கப்பட்டுள்ளது இன்னும் பல உண்டு