பின்னர் அந்த கப்பலை தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வர அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர்.
ஆனால், கப்பலில் ஆயுதங்கள் இருப்பதாக வந்துள்ள தகவலால் துறைமுகத்துக்குள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் சீன கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்ப முடியாத அளவுக்கு ÔநாயகிதேவிÕ மற்றும் ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டன. அடுத்த வட்டத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சீன கப்பல் சிறை பிடிக்கப்பட்ட தகவல் தலைமை செயலர், மத்திய, மாநில உளவுத் துறை, கியூ பிராஞ்ச், மரைன் போலீஸ் மற்றும் நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. கப்பலில் ஆயுதங்களை சோதனையிடுவதற்கு முன்பு தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால் மத்திய அரசின் அனுமதிக்காக கடலோர காவல் படை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் சோதனை நடத்தும் முறைகள் குறித்து அனைத்து பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கிடையே சீனா வில் பதிவு செய்யப்பட்ட இந்த கப்பல், அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு வந்ததாகவும், கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள கப்பலில் ஆயுதங்கள் வைத்துள்ளதாகவும், அதற்கு சர்வதேச உரிமம் பெற்றிருப்ப தாகவும் சீ மேன் கார்டு கப்பல் பணியாளர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் கப்பலை சோதனையிட இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக