மாணவிகளுடன்
கள்ளக்காதலில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டதால் மனைவி விஜயலட்சுமியை கொடூரமாக
கொலை செய்ததாக நடராஜன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.
சென்னை படப்பையில்
தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நடராஜன்,
மனைவி விஜயலட்சுமியை கொன்று திருவேற்காடு அருகே கால்வாயில் புதைத்த
குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் சென்னை வந்த போலீசார் விஜயலட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதன்படி அவர் கத்தியால் குத்தப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் திருப்பமாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்தினி கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜயலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரிந்ததும் அதை மறைத்த குற்றத்துக்காக போலீசார் கீர்த்தினி மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசார் விரித்த வலையில் அவர் சிக்கியது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. பேராசிரியர் நடராஜனுக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த சித்ரா, சென்னையை சேர்ந்த கீர்த்தினி ஆகிய 2 மாணவி களுடன் தொடர்பு இருந்தது. 2 பேருடனும் அவர் குடும்பம் நடத்தி வந்தார்.
போலீசார் அவர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத் து விசாரித்தனர். சித்ராவுக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை விடுவித்தனர்.
இன்று மாணவி கீர்த்தினியிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். நடராஜன் பயன்படுத்தி வந்த சிம்கார்டு கீர்த்தினி பெயரில் உள்ளது.
இதுபற்றி கேட்டதற்கும் அவர் பதில் ஏதும் கூறவில்லை. இவர் முன்ஜாமீன் கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். இதனால் பேராசிரியர் மனைவி கொலையில் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் கைது
செய்யப்பட்டார். பின்னர் அவர் இன்று காலை மாஜிஸ்திரேட்டு முன்பு
ஆஜர்படுத்தப்பட்டு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்படுகிறார். கைதான கீர்த்தனி
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.டெக். படித்து வருகிறார்.
பேராசிரியர் மனைவி கொலையில் கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடராஜனை காவலில் எடுத்து விசாரிக்கும் காலம் முடிந்ததால் அவரை நேற்று மாலை பரமத்தி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து நடராஜனை மேலும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடராஜன் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக