நடிகை குஷ்புவின் கணவரும் இயக்குனருமான சுந்தர்.சி சில படங்களில்
ஹீரோவாக நடித்தார். இப்போது நடிப்பை நிறுத்திவிட்டு இயக்கத்தில் இறங்கி
இருக்கிறார்.
சமீபமாக வெளிவந்த
கலகலப்பு படத்தை சுந்தர்.சி தான் இயக்கி இருந்தார். கலகலப்பான இந்தப்படம்
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சுந்தர்.சி
அடுத்து விஷால் நடிக்கும் மத கஜ ராஜா (எம்.ஜி.ஆர்) படத்தை இயக்க
இருக்கிறார். இதில் நடிகை ராதாவின் மகள் ஹீரோயினாக நடிக்கிறார்.
இனி
வரும் படங்களில் தமிழ் தெரிந்த நடிகைகளைத் தான் என் படத்தில் நடிக்க
வைப்பேன் என்ற முடிவை எடுத்துள்ளார் சுந்தர்.சி. தமிழ் பேசும் நடிகைகளையே
என் படங்களில் தேர்வு செய்கிறேன்.
மொழி தெரியாதவர்களை நடிக்க வைப்பது இல்லை. தமிழ் தெரிந்த நடிகளால்
மட்டுமே வசனத்தையும் புரிந்து கொண்டு ஈடுபாட்டோடு நடிக்க
முடியும். உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். அவர்களை நடிக்க வைப்பதும்
எளிதாக இருக்கிறது. மொழி தெரியாதவர்களால் சிறப்பாக நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
சுந்தர்.சியின்
இந்த முடிவு தமிழ் திரைவட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரம்பா, நக்மா, கிரண், ரீமாசென், அனுஷ்கா என்று தமிழ் பேசத்தெரியாத நடிகைகளை
தன் படத்தில் நடிக்க வைத்தவர் சுந்தர்.சி. ரம்பாவை தமிழ் சினிமாவுக்கு
அறிமுகம் செய்தவரே சுந்தர்.சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக