நடிகை
குஷ்பூ தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
திருச்சிக்கு அருகில் ஒரு கோயில் கட்டும் அளவிற்கு குஷ்பூவிற்கு தீவிர
ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சமீபமாக குஷ்பூ தனது குடும்பம்,
சின்னத்திரை, அரசியல் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்திவந்தாலும்
எப்போதாவது ஓரிரு படங்களில் நடித்துவருகிறார்.
ஒவ்வொரு
நடிகைக்கும் இருக்கும் பொதுவான ஆசை நாம் பார்த்து ரசித்து வளர்ந்த
ஹீரோவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான். குஷ்பூ சிறிய வயதிலிருந்தே
அமிதாப் பச்சனின் தீவிர ரசிகை. அவரோடு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது
விட்டுவிடுவாரா குஷ்பூ.
இந்தியில்
தயாராகிகொண்டிருக்கும் ‘மேட் டாட்’ என்ற படத்தில் அமிதாப் பச்சனுக்கு
ஜோடியாக நடிக்கிறீர்களா என்று ரேவதி வர்மா கேட்டவுடன் நடிக்க
ஒப்புக்கொண்டுவிட்டாராம் குஷ்பூ.
அமிதாப்பின் மனைவி கேரக்டரில் நடிக்கும் குஷ்பூவைவிட, அவரது மகள்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எப்படியும் அமிதாப் பச்சனை சந்தித்துவிடுவோம் என்று.
அமிதாப்பின் மனைவி கேரக்டரில் நடிக்கும் குஷ்பூவைவிட, அவரது மகள்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எப்படியும் அமிதாப் பச்சனை சந்தித்துவிடுவோம் என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக