சனி, 21 ஜூலை, 2012

மீண்டும் இந்தி Nehruவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா?

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்று நடைபெற்ற அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ஆயுள் காப்பீட்டுக் கழக, தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் என்றும்,< அதில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கள் கிழமைகளில் இந்தியில் கையெழுத்திட வேண்டும், கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித் திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சுற்றறிக்கைகளினால் தான் முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டமே தொடங்கியது.

பண்டித நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக் குறுதியை மறந்து விட்டு மீண்டும் தேவையில் லாமல் இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு இதுபற்றி கவனித்து தக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி! நேருவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது’’என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: