திங்கள், 16 ஏப்ரல், 2012

போலீஸ் உயரதிகாரிகளிடம் ஒருங் கிணைப்பு இல்லை ராமஜெயம் கொலை

குற்ற வாளிகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவற்கு முக்கிய காரணம் போலீஸ் உயரதிகாரிகளிடமும் ஒருங் கிணைப்பு இல்லை

விடை தெரியாமல் இருக்கும் ராமஜெயம் கொடூரக் கொலை விவகாரத்தில், நக்கீரன் வெளியிட்ட செய்தியால் போலீஸின் விசாரணைக் கோணம் மாறியிருக்கிறது. கடந்த இதழில், கற்பூரசுந்தரபாண்டியன் என்ற பேங்க் புரமோட்டருக்கு ராமஜெயத்தின் மீது கோபம் இருந்ததை விரிவாக எழுதியிருந்தோம். ராமஜெயத்தின் நண்பர்களிடம் இது குறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசா ரணையிலும் இந்தக் கோபம் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
கற்பூரசுந்தரபாண்டியனின் சொந்த ஊரான விருத்தாசலம் அருகிலுள்ள சி.கீரனூருக்கு இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி தலைமையிலான தனிப்படை விரைந்து அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளது. கற்பூரசுந்தர பாண்டியனின் அப்பா ராஜவேலுவை நாம் நேரில் சந்தித்தபோது தெரிவித்ததுபோலவே, தன் மகனுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனப் போலீசாரிடமும் தெரிவித்ததோடு, ""வேண்டு மானால் எங்க குடும்பத் தையே கைது செஞ்சுக் குங்க'' என்று சொல்லி யிருக்கிறார். அத்துடன், கற்பூரசுந்தரபாண்டியனுக் கும் இந்தத் தகவல் பாஸாகியுள்ளது.
அடுத்த 1 மணி நேரத்தில், இன்ஸ்பெக் டரின் லைனுக்கு வந்த கற்பூரசுந்தரபாண்டியன், நேரில் ஆஜராவதாகக் கூறியுள்ளார். சென் னையிலிருந்து வழக்கறிஞரின் துணையோடு வந்து, ""எனக்கு ராமஜெயத்தால் பல தொல்லைகள் ஏற்பட்டது. கோபமும் உண்டு. ஆனால், கொலை செய்கிற அளவுக்கு இல்லை'' என்று போலீசிடம் கற்பூரசுந்தரபாண்டியன் சொல்ல, அவரை கண்காணிப்பிலேயே வைத்துள்ளது போலீஸ்.

திருச்சியில் உடையார் சமூகத்தைச் சேர்ந்த துரைராஜை எரித்துக் கொலை செய்தவர்கள்தான் ராமஜெயத்தையும் கொலை செய்திருக்கவேண்டும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காருக்குள் துரைராஜின் கைகால்களைக் கட்டித்தான் எரித்துக் கொன்றிருந்தனர்.

லோக்கல் போலீசாரால் அவர்தான் துரைராஜ் என்பதைக்கூட அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. சி.பி.சி.ஐ.டி.க்கு பொறுப்பு வகித்த துக்கையாண்டிதான், எரித்துக் கொல்லப்பட்டவரின் பல்லை வைத்து துரைராஜ் என்பதை உறுதி செய்தார். சி.பி.சி.ஐ.டியிலிருந்து துக்கையாண்டி மாற்றப்பட்டபிறகு, துரைராஜ் கொலை வழக்கு விசாரணையில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

துரைராஜ் கொலை வழக்கில் சாமிரவியையும் போஸ்நாடார்செல்வம் என்பவரையும் அப்போது போலீசார் சந்தேகப்பட்டனர். சாமிரவி லண்டனுக்கும் போஸ்நாடார் சிங்கப்பூருக்கும் தப்பியோடிவிட்டார்கள். 3 ஆண்டுகள் அங்கேயே இருந்தவர்கள், தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு சில காலம் முன்பாகத்தான் திருச்சிக்கு வந்து செட்டிலானார்கள். ராமஜெயம் கொலை வழக்கில் திருச்சி போலீஸ் கமிஷனரின் பார்வை இவர்கள் பக்கம் திரும்ப, தனிப்படையில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் இருவரே, சாமிரவி திருந்திவிட்டதாக கமிஷனரிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சென்னையிலிருந்து உளவுப்பிரிவு மூலம் சாமிரவி பற்றி கமிஷனருக்குத் தகவல் வந்துள்ளது.

முட்டைரவி குரூப்பில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தவர்களில் சாமிரவி முக்கியமான நபர் என்றும், சிதம்பரம் ம.தி.மு.க பிரமுகர் பழனிவேலு கொலை வழக்கு உள்பட 9 கொலை கேஸ்களில் தொடர்பு உண்டு என்பதும், மூ.மு.க ஸ்ரீதர்வாண்டையார் மூலமாகத்தான் முட்டைரவியிடம் சாமிரவி நெருங்கினார் என்பதும் கமிஷனருக்குத் தெரிய வந்துள்ளதாம். சாமிரவியை விசாரணைக்கு அழைத்து, இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் சிறப்பான முறையில் விசாரித்தாராம். ""உனக்குத் தெரியாமல் எந்தக் கொலையும் திருச்சியில் நடக்காது'' என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, அப்போது ""போஸ் நாடாருக்கும் விவரம் தெரியும். அவரையும் விசாரிங்க'' என்றாராம் சாமிரவி.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக மதுரை கணேஷும் விசாரணை வளையத்திற்குள் வர, முட்டைரவியின் வழக்கறிஞரை கணேஷ் சந்தித்து தனக்காக ஆஜராகுமாறு கெஞ்சியதாகவும், தற்போது எந்த ரவுடிக்கும் ஆஜராவதில்லை என வழக்கறிஞர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் பரவிக்கொண்டிருக் கின்றன.

திருச்சி ரவுடிகள் பலரும் தங்கள் குருவான முட்டை ரவியையும் பிச்சைமுத்துவையும் போலீசார் என்கவுன்டரில் காலி செய்ததற்கு ராமஜெயம்தான் கார ணம் என நினைக்கிறார்களாம். என்கவுன்டர் நேரத்தில் இது குறித்து அதிகமாக பேசியவர்கள், அதன்பின் அமைதியாகியிருந்த நிலையில், இப்போதுள்ள அரசியல் சூழலை வைத்து ராமஜெயத்தின் மீதான கோபத்திற்கு பழி தீர்த்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நகர்ந்துகொண்டிருக்கிறது.

திருச்சி ரவுடிகளும் கடந்த இதழில் நாம் குறிப்பிட்டிருந்த பாண் டிச்சேரி ரவுடிகளும் சேர்ந்து இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியிருக்க லாம் என்றும், அதற்கு கற்பூர சுந்தரபாண்டியனை ஒரு கருவியாகவோ அல்லது பண உத விக்காகவோ பயன்படுத் தியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப் படுவதால் பாண்டிச் சேரி ரவுடிகள் மீதான கண்காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டுள்ள தாம்.

நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்கிறது போலீஸ் தரப்பு. ஆனால், ராம ஜெயம் கொலை செய்யப்பட்டு 20 நாட்களாகியும் போலீசார் வெறும் சந்தேகத்தின் பேரிலான விசா ரணையையே நடத்திவருகிறார்கள் என்பது திருச்சி பொதுமக்களிடம் கேள்விகளை எழுப்பி வருகிறது.

கொலைக்குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவை தனித் தனிப் படைகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. போலீஸ் உயரதிகாரிகளிடமும் ஒருங் கிணைப்பு இல்லை. இதுதான் குற்ற வாளிகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவற்கு முக்கிய காரணம் என்கிறது காக்கிகள் வட்டாரம்.

-ஜெ.டி.ஆர்.
thanks nakkeeran + singam chennai

கருத்துகள் இல்லை: