வியாழன், 19 ஏப்ரல், 2012

திருவண்ணாமலை தனியார் பள்ளி ‘பிட்’ கொடுக்க காரணமென்ன?


திருவண்ணாமலையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியான செயின்ட் மவுன்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது கணக்கு தேர்வன்று திடீரென அப்பள்ளிக்கு வருவாய்துறை மற்றும் காவல்துறையினரோடு ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவரான அன்சூல்மிஸ்ரா.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ‘பிட்’ தரும் முயற்சியில் இருந்த ஏழு ஆசிரியர்களை பிடித்தார். அதோடு அப்பள்ளியின் அலுவலக அறையில் அன்றைய கணக்கு பாடத்தேர்வு கேள்வி தாள் ஒன்றும், அதற்கான விடை எழுதப்பட்ட பேப்பர் ஒன்று ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பிடித்தார் கலெக்டர்.

அதன்பின் நடந்த விசாரணையில், நிர்வாகம் சொல்லியே இதனை செய்ததாக ஆசிரியர்கள் வாக்குமூலம் தர தேர்வு பணியில் இருந்த 7 ஆசிரியர்கள் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப் பட்டுள்ளனர்.

புணம் வாங்குகிறோமே அவர்கள் தேர்ச்சி பெற்றால் தான் தங்களுக்கு மரியாதை என்பதை உணர்ந்தே தேர்வு காலங்களில் பிட் அடிக்க வைப்பது, புத்தகம் பார்த்து எழுத வைப்பது, தேர்வு மையத்தில் சொல்லி தருவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு மாணவர்களை அதிகளவு வெற்றி பெற வைத்து 100 சதவிதம் தேர்ச்சி, மாவட்டத்தில் முதலிடம், இரண்டாமிடம்  என விளம்பரம் செய்து அந்த ஆண்டு கல்வி கட்டணத்தை கணிசமாக உயர்த்தி வந்தன இப்பள்ளி நிர்வாகம்.


பிட் அடிக்க வைக்க தங்களுக்கு தோதான ஆசிரியர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளராக இருக்க வேண்டும், தேர்வு நடைபெறும் அறையின் பொறுப்பு ஆசிரியராக தமக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வர செய்ய என்ன செய்யலாம் என யோசித்தே அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியை பெற முயன்றது.

அதன்படி அனைத்து கட்சியிலும் உள்ள பிரபலமான அரசியல்வாதிகளின் பிள்ளைகள், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, வருவாய்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலகர்களின் பிள்ளைகளுக்கு நுழைவு தேர்வு இல்லாமல் சீட் தந்து தனது பலத்தை பெறுக்கிக்கொள்ள தொடங்கியது இப்பள்ளி நிர்வாகம்.

மீப ஆண்டுகளாக இப்பள்ளியில் பயிலும் பணக்கார வீட்டு பிள்ளைகள் தவறான திசையில் நோக்கி செல்ல அதை கண்டிக்க முடியாமல் தடுமாற தொடங்கியது நிர்வாகம். அதிகாரத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் தோல்வியுற்றால் தங்களுக்கு அவமானம். 100 சதவித தேர்ச்சியில்லையென்றால் வேறு பள்ளிகளுக்கு வசதியானவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் போய்விடுவார்கள் என்பதால் அப்பிள் ளைகளை தேர்ச்சி பெற வைக்க பிட் தந்து தேர்வு எழுத வைக்க தொடங்கியது இப்பள்ளி.

கடந்த 3 ஆண்டுகளாக இப்பள்ளியில் தேர்வு நேரத்தின் போது பிட் தருகிறார்கள் என்ற குற்றாச்சாட்டு எழுந்து பறக்கும்படையினர் ஒரு சிலமுறை செக் செய்ய சென்றனர்.

ஆனால் அப்போது சிக்கவில்லை. அதற்கு காரணம், திருவண்ணாமலை சி.இ.ஓ அலுவலகத்தில் சி.இ.ஓவின் பி.ஏவாக உள்ள ஒருவரின் மகன் இப்பள்ளியில் படிப்பதால் ரெய்டு தகவல் முன்கூட்டியே பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தந்துவந்துள்ளார். இதனால் நிர்வாகம் அப்போதுயெல்லாம் உஷாராக இருந்தன.


இந்தமுறை அந்த அலுவலர், பல அரசியல், சில தலைமையாசிரியர்களின் பிள்ளைகள் இந்த பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். ஆங்கில தேர்வின் போது அதிகமாக பிட் தந்துள்ளனர். இதனை உள்வாங்கிய நன்றாக படிக்கும் ஒரு மாணவி தனது பெற்றோர் இதுப்பற்றி கூற அவர்கள் கலெக்டருக்கு இமெயிலில் புகார் அனுப்பினர். அதன்படியே கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக இந்த ரெய்டை நடத்தி மோசடி செய்தவர்களை பிடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: