ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

ராமஜெயம் கொலை: சென்னை கல்லூரி மாணவரிடம் விசாரணை

திருச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரமாரி தாக்கி கொலை செய்யப்பட்டார். அவர் நடைபயிற்சிக்கு சென்ற போது அவரை யாரோ சிலர் கடத்தி சென்ற கொன்று பிணத்தை திருச்சி அருகே வீசி விட்டு தப்பி சென்று விட்டனர்.

கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் செல்போனுக்கு யார் யார் பேசி உள்ளனர் என்றும், அவர் யார் யாருக்கு பேசி உள்ளார் என்றும் தற்போது விசாரணை நடந்து வருகிறது. ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் அவருக்கு வந்த போன் எண்களை வைத்து  விசாரணை நடந்து வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள வீரகனூர் கிழக்கு ராஜாபாளையத்தை சேர்ந்த ணவர்  ஒருவரின் செல்போனில் இருந்தும் ராமஜெயத்துக்கு போன் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் கிழக்கு ராஜபாளையம் சென்றனர். அங்கு வசித்து வரும் மாணவர் ஒருவரை  பிடித்து விசாரித்தனர்.

சென்னையில்  உள்ள கல்லூரி ஒன்றில் அவர் படித்து வருகிறார். இவரிடம் தனிப்படை போலீசார் விசாரித் தபோது, தனது செல்போன் தொலைந்து விட்டது.
நான் ராமஜெயத்திற்கு போன் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் போலீசாருக்கு அந்த மாணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று போலீஸ் உயர் அதிகாரிகளும், தனிப்படை போலீசாரும் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.

இந்த  மாணவர் படிக்கும் கல்லூரியிலும், அவரது உறவினர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மாணவரின் பெயர் விவரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை: