புதன், 11 ஏப்ரல், 2012

19 வயது தொழிலாளியை, 29 வயது பெண் கடத்தியதாக


சிவகாசி அருகே 19 வயது தொழிலாளியை, 29 வயது பெண் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,ஆஜராக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சிவகாசி சிவகாமிபுரத்தை சேர்ந்த பெரியகருப்பன் தாக்கல் செய்த மனுவில்,  ‘’ நான் பால் வியாபாரம் செய்கிறேன். எனக்கு 2 மகள், 3 மகன்கள். மகன் சிதம்பரம்,19, சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவர் 2010 நவம்பரில் மாயமானார். அவரை மாரியம்மாள்,29, என்பவர் கடத்தியிருக்கலாம் என தெரிந்தது.

சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை இல்லை. சிதம்பரத்தை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’’  என்று  குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், எம்.விஜயராகவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜரானார்.

அவர்,  ‘’மனுதாரர் மகனை கண்டுபிடித்துத் தருவ தாகக்கூறி, மிரட்டி எஸ்.ஐ., அழகர் பணம் கேட்கிறார். சிதம்பரம், மாரியம்மாள் திருமணம் செய்துகொண்டு, கேரளாவில் உள்ளதாக தவறான தகவல்களை எஸ்.ஐ., பரப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும்’’என மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

’’இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., ஏப்ரல் 16 ல் ஆஜராக வேண்டும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை: