
தயாநிதி மாறன், தமக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களை ஒவ்வொருவராக ஆஃப் பண்ணும் முயற்சியில் முதல் படி என்று கூறப்படுகிறது.
வெளி நிதியுதவிகளில் இயங்கும் அரசு சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களை, நிதியுதவிகளை வைத்தே திருப்ப முடியும் என்ற பரவலான குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்துவருகிறது.
Telecom Watchdog அடித்த பல்டியை அப்படியே விட்டுவிட சுப்ரீம் கோர்ட் தயாராக இல்லை என்பதுதான், ‘கொடுத்தவர்களுக்கும், பெற்றவர்களுக்கும்’ உள்ள சிக்கல். “நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டதன் காரணத்தை 7 நாட்களுக்குள் எழுத்து மூலமாக தாக்கல் செய்யுங்கள்” என்று உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்.
நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட என்.ஜி.ஓ.-வின் செயலாளர் அனில் குமார், சி.பி.ஐ. டைரக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மாறன் குற்றமற்றவர் என்று எமக்கு இப்போதுதான் புரிந்துள்ளது. அவரோடு டீல் வைத்துக்கொண்ட சிவசங்கரன்தான் ஃபிராடு என்பதையும் தற்போது உணர்ந்து கொண்டுள்ளோம்” என்று எழுதியுள்ளார்.
டில்லி அரசியல் வட்டாரங்களில், “குறிப்பிட்ட சில அமைப்புகள், பசையுள்ள பார்ட்டிகளிடம் இருந்து பெற வேண்டியவற்றை பெறுவதற்காக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்வதும், அதன்பின் பேரம்பேசல் வெற்றிகரமாக முடிந்தால், “அண்ணன் உத்தமர் என்று கண்டுகொண்டேன்” என்ற கடிதத்துடன் வழக்கை திருப்பி விடுவதும் சகஜம்தான்” என்கிறார்கள்.
சில அரசியல் வழக்குகளில் 25-க்கும் மேற்பட்ட அமைப்புகள்கூட பொதுநல வழக்குகளை தொடர்ந்த வரலாறு உண்டு. அப்படியான நிலைமை ஏற்பட்டால், செலவு ஜாஸ்தியாகும். தயாநிதி மாறன் விவகாரத்தில், இந்த இலக்கம் அவ்வளவு பெரியது அல்ல என்பதால், கடைசி நேரத்தில் காசால் அடிப்பது அவ்வளவாக செலவு பிடிக்கும் ஆபரேஷன் அல்ல.
Telecom Watchdog செயலாளர் அனில் குமார், சி.பி.ஐ. டைரக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அற்புத மனிதர் தயாநிதி மாறன் மீதாக விசாரணைகளை சி.பி.ஐ. உடனடியாக நிறுத்திக்கொண்டு, வேறு அலுவல்களில் கவனம் செலுத்துவது நல்லது. முடிந்தால், இந்த அப்பாவி மனிதரை மீண்டும் அமைச்சராக்கி அழகு பார்க்கலாம்” என்று எழுதியதாக தகவல் இல்லை.
ஒரு என் ஜி ஓவின் தில்லு முல்லு தயாநிதி மாறன் உத்தமராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக