செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

Admk Mafiaநடராஜனை ராவணன் போட்டு கொடுத்ததாக… வரக்கூடாத சந்தேகம்!

Viruvirupuதிடீர் திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் திரைப்படம் போலத்தான் போய்க் கொண்டிருக்கிறது ராவணன் விவகாரம். இதில் உளவுத்துறை டீமுக்கே தலை சுற்ற வைத்த திருப்பம், ராவணன் பற்றி சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த வேறு இருவர் பேசிக்கொண்ட விவகாரம்தான்!
நடராஜன் கைது செய்யப்பட்ட நாட்களில் ராவணன், பெரும்பாலும் விசாரணை இல்லாமல்தான் வைக்கப்பட்டிருந்தார். அவரிடம் இனி என்ன கேட்பது என்பதில் போலீஸ் அதிகாரிகளுக்கே குழப்பம் வந்துவிட்டதில், ராவணன் விசாரணை ஏதுமில்லாமல் சும்மாதான் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்.
நடராஜன் கைது செய்யப்பட்ட தினமன்று, ராவணனிடம் பேச்சுக் கொடுத்த போலீஸ் அதிகாரி ஒருவர், “நடராஜன் சாரை கைது செய்யும்படி மேலிட உத்தரவு வந்திருக்கிறதே..  அவர் மேடத்துக்கு எதிராக ஏதாவது மூவ் செய்திருப்பாரா?” என்று நூல் விட்டுப் பார்த்தார். ராவணனிடம் இருந்து சோக கீதம்தான் பதிலாக வந்திருந்தது.
“நடராஜன்கூட நான் அவ்வளவா பேச்சு வெச்சுக்கிறதில்லை. நடராஜன், திவாகரன்லாம் ஒரே செட்.
அவர்களுக்கு என்னை பிடிக்காது. நானும் அவங்ககூட மிக்ஸ் பண்ணிக்கிறதில்லை. அதால நடராஜன் என்ன செஞ்சாருன்னு எனக்கு தெரிய சான்ஸே இல்லை” என்று ராவணன் சொன்னதுடன், அவரை விட்டுவிட்டு, நடராஜன் விவகாரத்தில் பிசியாகி விட்டனர் அதிகாரிகள்.
அதன்பின் 3 நாட்களாக ராவணனை விசாரிக்கவென்று யாரும் அவர் இருக்கும் பக்கமே எட்டிக்கூட பார்க்கவில்லை.
இந்த நிலையில்தான் சசிகலா சின்டிகேட்டை தமது கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்த உளவுத்துறை டீம், டெலிபோன் உரையாடல் ஒன்றை பிக் பண்ணியது. சசிகலாவுடன் ஒன்றாக வெளியே அனுப்பப்பட்ட இருவர், நடராஜன் கைது செய்யப்பட்டபின் தமக்கிடையே பேசிக்கொண்ட டெலிபோன் உரையாடல்தான், உளவுத்துறை டீமின் மேஜைக்கு வந்திருந்தது.
“நடராஜன் பற்றி ராவணன் ஏதோ சில விஷயங்களை சொல்லியதால்தான் அவசரமாக நடராஜன் கைது செய்யப்பட்டிருப்பாரோ” என்று அவர்கள் இருவரும் டிஸ்கஸ் பண்ணியதுதான், அந்த டெலிபோன் உரையாடலில் ஹைலைட்!
இதன்பின் அதிகாரிகளின் கவனம் மீண்டும் ராவணன்மீது படிந்தது. அதுவரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடராஜன் தொடர்பாக அவர் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று ஒருமுறை ரிவைஸ் பண்ணிப் பார்த்தார்கள்.
ராவணன் கைது செய்யப்பட்ட உடனே, அவரிடம் பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் காருண்யா நகர் காவல் நிலையத்தில் வைத்து கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றில் நடராஜன் தொடர்பான கேள்விகளும் இருந்தன. அந்த விசாரணை கோவை ரூரல் எஸ்.பி. உமா தலைமையில் நடைபெற்றிருந்தது. அதன்பின், திருப்பூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு டீமும் ராவணனிடம் விசாரணை நடத்தியிருந்தது.
அந்த ரிக்கார்ட் எல்லாவற்றையும் உளவுத்துறை டீம் பார்த்தபோது, நடராஜன் பற்றி சில பொதுப்படையான விஷயங்களையே ராவணன் கூறியிருந்தார். முடிந்தவரை நடராஜன் பற்றி பேசுவதையே அவர் தவிர்த்திருந்தார்.
அதன்பின் நடைபெற்ற எந்த விசாரணையிலும் நடராஜன் சப்ஜெக்டே வரவில்லை.
ஆனால், இப்போது சசி சின்டிகேட் ஆட்கள் இருவருடைய போன் உரையாடலில் இருந்து ராவணனுக்கு நடராஜன் தொடர்பாக ‘ஏதோ’ தெரியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது உளவுத்துறை டீம். “நடராஜன் பற்றி ராவணன் போட்டுக் கொடுத்திருப்பாரோ?” என்று இவர்கள் சந்தேகப்படும் அளவுக்கு, அந்த விஷயம் இருக்க வேண்டும் எனவும் உளவுத்துறை டீம் யோசித்திருக்கலாம்.
இப்போது, ராவணனை இந்தக் கோணத்தில் விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
அதற்கு மஜிஸ்திரேட் அனுமதி பெற்று ராவணனை போலீஸ் காவலில் எடுத்து ஸ்டேஷனுக்கு (அல்லது வேறு எங்காவது) கொண்டு செல்ல வேண்டும்.
ராவணன்மீது ஏற்கனவே பதிவாகியுள்ள வழக்குகளில் ஏதாவது ஒன்றில் அவரை மற்றொரு தடவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என்று பார்க்கப் படுகிறது. அது சாத்தியம் இல்லையென்றால் ஃபிரெஷ் கேஸ் ஒன்றுதான் போட வேண்டும்.
அடுத்த சில தினங்களில், ராவணன்மீது உப்புச்சப்பில்லாத கேஸ் ஒன்று பதிவாகியது என்ற செய்தி வெளியானால், அது எதற்கு என்பதை நீங்கள் சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: