சனி, 3 மார்ச், 2012

நடராஜனுக்கு போலீஸ் ஸ்டேஷனோடு இடிந்து நெருங்கிய இமேஜ்!

Viruvirupu
நடராஜன் தொடர்பாக வெளியே காண்பிக்கப்பட்ட இமேஜ் உடைந்து நொருங்குவதை அவரது ஆதரவாளர்கள் காணத் தொடங்கியுள்ளார்கள். நடராஜனை கைது செய்தால், அரசியல் ரீதியாக கொந்தளிப்பு ஏற்படும் என்று இருந்த எதிர்பார்ப்பு, புஸ் என்று போயிருக்கிறது.
இந்தக் கைதுடன் தொடர்பாக அரசியல் ரீதியாக ஏதாவது ஆக்ஷன் காட்டக்கூடிய சில அமைப்புகள் இருந்தன. அந்த அமைப்புகளை ‘சைலன்ட்’ ஆக்கும் வகையில் காவல்துறை செய்த சில ஏற்பாடுகள் வெற்றி கண்டிருக்கின்றன.
இதில் தொடர்புடையதாக கூறப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் பிரச்னையாக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்டபோது இருந்த வேகம் எல்லாம் உள்ளேயிருந்த நாட்களில் நடராஜனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விட்டது.
காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர் இப்போது விரக்தியுற்ற, தளர்ந்த நிலையில் இருக்கிறார் என்றார்கள். (நடராஜன் தஞ்சாவூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோவில் அவரது தோற்றத்தை கவனியுங்கள்)

தஞ்சாவூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட நடராஜனின் பரிதாப தோற்றம்
நிலைமை இப்படியாக இருந்தாலும், ரிலாக்ஸ்டாக இருக்க விரும்பவில்லை போலீஸ்.
நடராஜன் முதலில் கைது செய்யப்பட்ட நிலம் தொடர்பாக இனியும் ‘இன உணர்வு’ தொடர்பான திருப்பங்கள் ஏற்படலாம் என்ற சான்ஸ் இருப்பதால், அந்த விவகாரத்தையே சீனில் இருந்து வெளியே எடுத்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய கேஸ் அப்படியே இருக்க, புதிய கேஸ் ஒன்றில் அவரை புக் பண்ணும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டது.
நடராஜன் மீது பதிவாகியுள்ள புதிய வழக்கு, ஒரு மோசடி கேஸ்.
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ1.6 கோடி மோசடி செய்ததாக பதிவாகியுள்ளது இந்த வழக்கு. புதிய வழக்கில் எந்த வகையிலும் நடராஜன் தரப்பால் அரசியல் செய்ய முடியாது என்பதை உறுதி செய்த பின்னரே கேஸை புக் பண்ணியுள்ளது காவல்துறை.
நடராஜனின் அக்கா ராஜலெட்சுமியின் மகன் சுரேஷ் என்பவருக்கு, திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் 1.69 ஏக்கர் நிலம் இருந்தது. அதனை ரூ1 கோடியே 60 லட்சம் விலைக்கு திருச்சியில் லாவண்யா பில்டர்ஸ் நடத்தி வரும் வரதராஜன் என்பவர் புரோக்கர்கள் மூலம் வாங்க விரும்பினார். பேச்சுவார்த்தை முடிந்து ரூ50,000 அட்வான்ஸ் தொகை கடந்த ஆண்டே சுரேஷிடம் கொடுக்கப்பட்டது. அதன்பின் மீதித் தொகையையும் செட்டில் செய்திருக்கிறார் வரதராஜன்.
பணம் கிடைத்த பின்னரும் சுரேஷ் அந்த இடத்தை வரதராஜனின் பெயருக்கு எழுதிக் கொடுக்கவில்லை.
நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு கேட்டதற்கு, நிலத்தையோ, பணத்தையோ கொடுக்க முடியாது என சுரேஷும், நடராஜனும் வேறு சிலரும் மிரட்டியதாக புகார் கொடுத்தார் வரதராஜன். அதன்பேரில் நடராஜன், சுரேஷ், குமார், சரண், அனந்தகிருஷ்ணன், சுரேஷின் மாமனார் செல்லபாண்டியன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் நடராஜன் திருச்சி மத்திய சிறையில் உள்ளார். நடராஜனின் அக்கா மகன் சுரேஷ், புரோக்கராக செயல்பட்ட குமார் ஆகிய இருவரையும் தஞ்சாவூரில் கைது செய்துள்ளனர். மற்றையவர்கள் தலைமறைவு என வழமைபோல கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பதிவான பின்னர், தனது கைதை வைத்து அரசியல் செய்திருக்கக்கூடிய காலம் கடந்து விட்டது என்பதை நடராஜன் புரிந்து கொண்டுள்ளார் என்கிறார்கள். நாம் அறிந்தவரை, நடராஜன் வெளியே வந்திருக்கக்கூடிய வேறு ஒரு வாய்ப்பும் அவருக்கு இருந்தது. அதையும் அவர் சரியாகக் கையாளவில்லை.
மேலிடத்துடன் முரண்படாமல் அடக்கி வாசிப்பது என்ற முடிவை அவர் எடுத்திருக்கவே சான்ஸ் அதிகம்

கருத்துகள் இல்லை: