ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

திடீர் கோடீஸ்வரரான பள்ளி ஆசிரியர்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கோரபுட்(ஒதிஷா): கோரபுட் மாவட்டத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த திடீர் கோடீஸ்வர ஆசிரியர் வீட்டில் ஒதிஷா மாநில லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.
கோரபுட் நகரில் பார்வையற்றோர் பள்ளிக்கூடம் ஒன்றில் "உதவி ஆசிரியராக" பணிபுரிபவர் நிரஞ்சன் சமந்த்ராய். விஷால் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவியும் கோரபுட் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போதும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இருவருமே ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் திடீரென நிறுவனங்களும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மாடி வீடுகளும் எப்படி சாத்தியமாயின? என்ற கேள்விக்கான விடைதான் லஞ்ச ஒழிப்பு போலீஸ்.
கோடீஸ்வர ஆசிரியர்களின் வீடுகளில் நடத்திய சோதனையின் முடிவில் இவர்களுக்கு எப்படி திடீர் சொத்து கிடைத்தது என்பது பற்றி தெரியவரும்

கருத்துகள் இல்லை: