வெள்ளி, 18 நவம்பர், 2011

நளினி+ ராமராஜன்+ மகள்+ குழப்பம்


தனியா நின்னு குழந்தைங்கள அவங்க விரும்பினதெல்லாம் படிக்க வைச்சேன். கல்யாணமும் பண்ணி முடிச்சா நிம்மதியாயிடலாம்னு பார்த்தா இப்படி ஆயிடுச்சே!’’ படப் பிடிப்புத் தளம் என்றும் பாராமல் அழுகிறார் நளினி. நவம்பர் 27-ம் தேதி நடக்கவிருந்த தன் மகள் அருணாவின் திருமணம் நின்றுபோனதுதான் இதற்குக் காரணம்.
நடிகர் ராமராஜனை விவாகரத்து செய்த நளினி, தன் இரட்டைக் குழந்தைகள் அருண், அருணாவுடன் தனியாக வசித்து வருகிறார். மகள் அருணாவுக்கு நவம்பர் 27-ம் தேதி திருமணம் என முடிவுசெய்து, அனைவருக்கும் பத்திரிகை கொடுத்த நிலையில், திருமணம் நளினி வீட்டாரால் நிறுத்தப்பட்டிருக்கிறது. என்ன காரணம் என நளினியே சொல்கிறார்.
‘‘என் வாழ்க்கை முழுக்க எத்தனையோ பிரச்னைகளைப் பார்த்தாச்சு. அது எதுவும் என் பிள்ளைகளை பாதிக்கக் கூடாதுன்னுதான் நல்லா படிக்க வைச்சேன். அதுக்காகத் தான் ராத்திரி, பகல்னு பார்க்காம மறுபடியும் நடிக்க வந்தேன். அதுக்கேத்த மாதிரி என்னோட இரண்டு குழந்தைகளும் படிப்பில் சுட்டி. பையன் அருண் படிப்பை முடிச்சி ட்டு சௌத் ஆப்பிரிக்காவுல ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கான். அருணா எம்.ஏ., பி.எல்., எம்.சி.ஏ. படிச்சிட்டு பரோடாவில் போய் சட்டம் படிக்கிறதா சொன்னா. நான்தான் ‘கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன வேணும்னாலும் படி’ன்னு கல்யாணத்துக்கு அவளை சம்மதிக்க வைச்சேன்.

மதுரையில் இருக்கிற எங்க அண்ணன் மூலமாகத்தான் அருணாவுக்கு ராமச்சந்திரனை பேசி முடிச்சோம். அவர் குவைத்ல ஒரு கம்பெனியில் வேலை செய்யிறார்னு சொன்னாங்க. நான் மாப்பிள்ளையை இன்னமும் நேரில் பார்க்கக் கூட இல்லை. அருணாகிட்ட போனில் பேசும்போது ராமச்சந்திரன் தப்புத்தப்பா பேசியிருக்கார்.

பாலசந்தர் டைரக்ஷன்ல வெளிவந்த ‘47 நாட்கள்’ படம்தான் தனக்கு ரொம்பப் பிடிக்கும்னு சொல்லி அதை என் பொண்ணுக்கிட்ட பார்க்கச் சொல்லியிருக்கார். வெளிநாட் டில் வேலை செய்யிற ஒருத்தன் ஏற்கெனவே கல்யாணமானதை மறைச்சு, சொந்த ஊர்ல ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டுப் போவான். கல்யாணத்துக்கு அப்புறமா அவன் அந்தப் பொண்ணை டார்ச்சர் பண்றதுதான் படத்தோட கதை. ராமச்சந்திரன் திருப்பித் திருப்பி அந்தப் படம் பத்தி பேசவும் என் பொண்ணு பயந்துட்டா.

அதுவும் இல்லாம, என்னைப் பத்தி, என் நடிப்பைப் பத்தி எல்லாம்கூட அவகிட்ட தேவையில்லாத கமெண்டெல்லாம் சொல்லியிருக்கார். அதில்தான் என் பொண்ணு டெ ன்ஷன் ஆயிட்டா. ‘இந்தக் கல்யாணம் நடந்தா நான் சந்தோஷமா இருக்க மாட்டேன். கல்யாணத்தை நிறுத்துங்க’ன்னு சொல்லிட்டா. ராமச்சந்திரன் மேல சந்தேகம் வரவும், பேசினதை மொபைல்ல ரெக்கார்ட் பண்ணி வைச்சிருக்கா. அதைக் கேட்கும்போது இந்த கல்யாணம் நடந்திருந்தா, என்ன ஆகியிருக்கும்னே யோசிக்க முடியலை’’ என்று மீண்டும் தாங்க முடியாமல் அழுதார் நளினி.
‘‘என் பொண்ணு கல்யாணத்தை எப்படியெல்லாமோ நடத்தணும்னு எனக்கும், என் பையனுக்கும் ஆசை இருந்திச்சு. என் பொண்ணும் கல்யாணத்துக்கு டிரெஸ், நகைன்னு எல்லாத்தையும் ஆசையா வாங்கினா. எல்லாம் போச்சு. ‘எனக்கு இப்ப கல்யாணமே வேண்டாம். நான் பரோடா போய் படிக்கப் போறேன்’னு அருணா மறுபடியும் சொல் கிறாள். அவள் இஷ்டப்படியே நடக்கட்டும்னு சொல்லிட்டேன்!’’ விரக்தியாக சிரித்தார் நளினி.

‘‘இந்தக் கல்யாணத்துக்காக முப்பது லட்ச ரூபாய் வரைக்கும் இதுவரைக்கும் செலவு பண்ணிட்டோம்.
முதல்வர் அம்மாகிட்ட பத்திரிகை கொடுக்கப் போனப்போ, என் கு டும்பத்தைப் பத்தி ரொம்ப அக்கறையா விசாரிச்சாங்க. கட்டாயம் கல்யாணத்துக்கு வர்றதா சொன்னாங்க. கல்யாணம் நடக்கலைங்கிறதையும், அதுக்கான காரணத்தையும் அவங்களுக்கு எழுதி அனுப்பியிருக்கோம். சின்னத்திரை நண்பர்கள்தான் இப்ப எனக்கு பெரிய ஆறுதல். அதனால்தான் வீட்டில் இருக்காம, நடிக்க வந்துட்டேன்.

இதைவிட நல்ல வாழ்க்கை என் பொண்ணுக்கு காத்திருக்குன்னு நினைக்கிறேன். அதனால்தான் இந்த இடம் தள்ளிப் போயிருக்குன்னு எடுத்துக்க வேண்டியதுதான்’’ என்று வேதனை மறந்து கொஞ்சம் சிரிக்கிறார் நளினி.
மகளின் கல்யாணம் குறித்து தன்னிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருந்தார் நடிகர் ராமராஜன். ஆனால் அழைப்பிதழில் அவர் பெயரும் இடம்பெற்றிருந்தது. திருமணம் நின்றுபோனது குறித்து அவரது கருத்தை அறிய முயன்றோம். ‘‘கல்யாணம் நின்னது பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. ஒண்ணும் தெரியாம வீட்டில அடைஞ்சி கிடக்கிறேன். கட்சி மீட்டிங்குக்கு மட்டும்தான் வெளியே போறேன். உண்மையில் கேட்கவே ரொம்ப வருத்தமா இருக்கு. சரியான ஆலோசனை இல்லாம ஏதாவது செய்தா இப்படித்தான் ஆகும்’’ என்று ஏதேதோ சொல்லி கலங்கினார்.

மாப்பிள்ளை ராமச்சந்திரன் தரப்பினரின் கருத்தறிய முயன்றோம். ஆனால் அவர்கள் தரப்பில் யாரும் பேச முன்வரவில்லை.

படம் : ம.செந்தில்நாதன்
தேவிமணி

கருத்துகள் இல்லை: