செவ்வாய், 15 நவம்பர், 2011

விஜய மல்லையாவின் Kingfisher மீண்டு வருமா?

விஜய் மல்லையா: “எனது கை-மடிப்புக்குள் என்ன இருக்கிறது?” 

ViruvirupuBangalore, India: Kingfisher Airlines Chairman Vijay Mallya said, “We have not asked the government to dip into the taxpayer’s money. Media and some political parties said so. As long as Kingfisher is concern, we have never done it, we will never do it”.  But, he agrees that he want the lenders to help with Rs 700-800 crore working capital as short-term need and interest concessions.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தொடர்பான பலதரப்பட்ட செய்திகள், வதந்திகள், ஊகங்கள் எல்லாம் கடந்த இரு தினங்களாக அடிபடும் நிலையில், உண்மையில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் நிலை என்ன? வெளிப்படையான கூறியிருக்கிறார் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா. “ஏர்லைன்ஸை மூடும் திட்டம் நிச்சயமாக எமது கை-மடிப்பில் கிடையாது”
“மற்றொரு நிச்சயமான விஷயம், கிங்ஃபிஷரைக் காப்பாற்ற வருமாறு நாம் அரசாங்கத்தைக் கோரவில்லை. மக்களின் வரிப் பணத்தில் எமது நிறுவனத்தைக் காப்பாற்றுமாறு கேட்கும் அளவில் நாம் இல்லை. இதுவரை அப்படி கேட்டதும் கிடையாது. இனிமேல் கேட்கும் யோசனையும் கிடையாது” என்று ‘அரசு தலையீடு’ பற்றிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அவர்.
எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் அரசின்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தன.
அரசாங்கம் மக்கள் பணத்தை கிங்ஃபிஷருக்கு கொடுத்க திட்டமிடுவதாக குற்றம் சாட்டியிருந்தன.
“அப்படியானால் நாம் யாருடைய உதவியையும் கோரவே இல்லையா?” என்று கேட்கும் விஜய் மல்லையா, “உதவியைக் கோரினோம். இப்போதும் கோருகிறோம். அரசாங்கத்திடமல்ல, எமக்கு நிதி வழங்கிய வங்கிகளிடம் தான் எமது கோரிக்கைகள். செயல் மூலதனத்துக்காக 700-800 கோடி ரூபா கோரியுள்ளோம். அத்துடன், தற்போது நாம் செலுத்திக் கொண்டிருக்கும் உயர் வட்டி வீதத்தையும் குறைக்குமாறு கோரியுள்ளோம்” என்கிறார்.
இந்த விஷயத்தில் விஜய் மல்லையா சரியான பாதையில் செல்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விமானப் பயண வர்த்தகம் சரியான முறையில் ரெகுவேட் பண்ணப்படாத ஒரு மார்க்கெட்டில், எந்த விமான நிறுவனத்துக்கும் ஏற்படக்கூடிய நிலைதான் இவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
தற்போது விஜய் மல்லையா செய்ய முயல்வது, ரீஸ்டக்ஷரிங் செய்யும் எந்தவொரு நிறுவனமும் வழமையாக செய்யும் ஒரு பிராக்டிஸ்தான். கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர்-கனடாவும், இப்படியொரு நிலைக்குச் சென்று ரீஸ்டக்ஷரிங் செய்து மீண்டது. அதே நிலைமை சுவிஸ் எயார் (சுவிட்சலாந்து), சபீனா ஏர்லைன்ஸ் (பெல்ஜியம்) ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், பான்-ஆம் (அமெரிக்கா) என்று வேறு பல நிறுவனங்களுக்கும் ஏற்பட்டபோது, அவர்களால் சரியான முறையில் ரீஸ்டக்ஷரிங் செய்ய முடிந்திருக்கவில்லை.
அவை யாவும் இழுத்து மூடப்பட்டன. (சுவிஸ் எயார் மூடப்பட்டு விட்டது. தற்போது சுவிஸ் இன்டர்நேஷனல் என்ற பெயரில் இயங்குவது வேறு நிறுவனம். முன்பு க்ராஸ் எயார் என்ற பெயரில் இயங்கிய நிறுவனத்தின் மறு வடிவம்தான் சுவிஸ் இன்டர்நேஷனல். அதேபோல மூடப்பட்ட சபீனா ஏர்லைன்ஸ் வேறு, தற்போது இயங்கும் பெல்ஜியர் ஏர்லைன்ஸ் வேறு)
பார்க்கலாம், கிங்ஃபிஷர் இதிலிருந்து தப்பி வெளியே வருகிறார்களா என்பதை.

கருத்துகள் இல்லை: