ஞாயிறு, 13 நவம்பர், 2011

கூடங்குளம் போராட்டத்தை வெளிநாட்டு உதவி பெறும் என்ஜிஓக்களே நடத்துகின்றனர்-டாக்டர் கிருஷ்ணசாமி

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தவில்லை. மாறாக வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெறும் என்ஜிஓக்களே நடத்துகின்றனர் என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நடந்துவருவது மக்கள் போராட்டமல்ல. மக்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக, வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெறும் என்ஜிஓக்களே இதை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் பல அணு மின் நிலையங்கள் உள்ளன. அங்கெல்லாம் போராட்டம் நடக்கவில்லை. மாறாக இங்கு மட்டும் போராட்டம் நடப்பது ஏன்.
தமிழகத்தில் ஜெயலலிதா அரசு மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக குறைந்து போய் விட்டது. சமச்சீர் கல்வி விவகாரம், மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம், மின்வெட்டு இன்னும் நீடிப்பது என பல காரணங்களால் மக்கள் நம்பிக்கை குறைந்து போய் விட்டது என்று கூறினார் கிருஷ்ணசாமி.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

எஞ்சிஒகள் நடத்துகிறார்களோ இல்லையோ அது முக்கியமில்லீங்கையா... அணுமின் நிலையம் வேணுமா? இல்லையான்கிறது தான்.. இது மாதிரி போராட்டகாரர்களை அவமானபடுத்துவதை முதலில் நிறுத்துங்கள்.