திங்கள், 14 நவம்பர், 2011

எனக்கு பையன் இருக்கிறான் அரசியல் வாரிசாக்கிட்டேன்; வேலுமுருகனை ராமதாஸ் கிண்டல் செய்தார்


எனக்கு பையன் இருக்கிறான் அரசியல் வாரிசாக்கிட்டேன்
உனக்கு குழந்தையே இல்ல...என்று
வேலுமுருகனை ராமதாஸ் கிண்டல் செய்தார்
நேற்று சேலத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், காவேரி மற்றும் காமராஜ் இருவரும், பா.ம.க விலிருந்து நீக்கப்பட பலரும், அடுத்து பா.ம.க விலிருந்து வெளியேற இருப்பாவர்களும் சேர்ந்து புதிய கட்சி துவங்கவுள்ளதாகவும், அது உண்மையான பா.ம.கவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுடன் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
’’ஆரம்பகாலத்தில், நாங்கள் கட்சி விசயமாக மாருத்துவர் அவர்களை சந்தித்து பேச தைலாபுரம் வீட்டுக்கு சென்றால், உங்களுக்கு எல்லாம்   வேலையில்லையா....? போய் உங்க வேலைய பாருங்க.... ஏன், அப்பாவுடைய வேலையும் கெடுத்து நீங்களும் வேலையில்லாம இருக்கீங்க.... போய் உங்க வேலையப்பருங்க என்று எங்களை திட்டுவார் அன்புமணி.
அதே போல மருத்துவரின் துணைவியாரும் எங்களை திட்டுவார், அதாவது அரசியல் மீதும், பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும் அவர்களுக்கு உண்மையான ஈடுபாடு இருந்ததில்லை.
அப்படியிருக்க.... அன்புமணியை, கட்சியில் தனது அதிகாரம் குறையக்கூடது என்ற பயத்தில், தனக்கு அரசியல் வாரிசாக திணித்தார் ராமதாஸ்.
 படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்தவரை கூட்டிக்கொண்டு வந்து கட்சி அலுவலகத்தில் உட்கார வைத்து, எங்களை எல்லாம் பார்த்து அன்புமணியை “சின்னஅய்யா” என்று சொல்லச் சொன்னார். அவரது பேச்சைக்கேட்டு நாங்களும் சொன்னோம்.

எல்லாவகையிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க சொன்னார்.
சரியான நேரத்தில் அவரை அமைச்சருமாக்கினார். இப்போது அன்புமணியை அரசியல் வாரிசாக ஏற்காத மூத்த தலைவர்களை கட்சியை விட்டு நீக்கி வருகிறார் ராமதாஸ்.
இப்போது கட்சியில் அண்புமணியின் தலையீடும், குறுக்கீடும் அதிகமானது.   அதனால் தான் கடந்த தேர்தல்களில் பா.ம.க தோல்வியடைந்துள்ளது என்று, கடந்த பொதுக்குழு கூடத்தில் வேல்முருகன் பேசியுள்ளார்.
அதற்கு பதில் சொன்ன மருத்துவர்,  எனக்கு பையன் இருக்கிறான் அரசியலுக்கு வாரான், உனக்கு குழந்தையில்லை அதுக்கு நான் என்னப்பா பண்ணட்டும்... என்று  வேல்முருகனுக்கு குழந்தைகள் இல்லை என்பதை பற்றி இழிவாக பேசியுள்ளார்.
தலைவரது பேச்சால் மனமுடைந்த வேல்முருகன் கூட்டத்திலிருந்து கண்ணீரோடு வெளியே வந்தார். அன்று நடந்த கூட்டத்தில், மற்ற கட்சிக்காரர்களிடம் வேல்முருகனை அடிக்க சொல்லியுள்ளார் கோ.கா.மணி.
கட்சிக்காக உயிரை கொடுத்த தியாகிகளையெல்லாம் மறந்து விட்டு இப்போது தனது குடும்ப சொத்தாக்கிகொண்டார் ராமதாஸ்.    பா.ம.க விலிருந்து நீக்கப்படவர்கள் போக இன்னும் சிலர் வெளியேற காத்துக்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கும் சேர்ந்து விரைவில் புதிய கட்சியை துவங்குவோம்’’ என்று காவேரியும், காமராசும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: