செவ்வாய், 26 அக்டோபர், 2010

யாழ்ப்பாணத்தில் சிங்களத் திரைப்படப் பிடிப்பு


யாழ்ப்பாணத்தில் தமிழ் – சிங்கள கலைஞர்கள், நடிகர்கள் பங்கேற்கும் சிங்களத் திரைப்படம் ஒன்றுக்கா படப்பிடிப்புக்கள் நடைபெற்று வருகின்றன.“செல்வம்” என்னும் பெயரிலான இந்தச் சிங்களத் திரைப்படம், தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் படமாக்கப்பட்டு வருவதாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பேராளியொருவர் தேச நலனில் அக்கறை கொண்டு படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றார். மருத்துவபீடத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவியுடன் இவருக்குக் காதல் ஏற்படுகின்றது. இருவரும் சைவ முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையமாகக் வைத்தே இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது. டோகோ மூவி கம்பனி தயாரித்து வரும் இப்படத்தை, பிரபல திரைப்பட இயக்குநர் என்.பத்மசிறி நெறிப்படுத்தி வருகின்றார். பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும், பாராளுமன்ற உறுப்பினருமான மாலினி பொன்சேகா உட்பட பல முன்னணிக் கலைஞர்கள் நடித்த காட்சிகள் அண்மையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கல்யாண மண்டபத்தில் படமாக்கப்பட்டது. யாழ் ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும் சில சிங்களவர்களும் இந்தப் படத்தில் துணைப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: