்
இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயங் களுக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்து வந்த மண்டைதீவு மத்தி பிரதேசம் மற்றும் வேல ணை வங்களாவடி முதல் வேலணை மத்திய கல்லூரி வரையிலான பிரதேசம் ஆகியன நேற்று முதல் மக்கள் பாவனைக்கு அனுமதிக் கப்பட்டுள்ளன. மண்டைதீவு பிரதான வீதி, வேலணை-ஊர்காவற்றுறை பிரதான வீதி ஆகியவற்றில் கடந்த 20வருடகாலமாக இருந்து வந்த போக்குவரத்துத் தடையும் நீக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.எம்.ஏ.வீரசேகர, தீவக கடற்படைத் தளபதி கப்டன் டி.எல்.எம்.ஏ.திஸாநா யக்க, தீவக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லலித் பிறேமரட்ண, ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் த.சிறிமோகனன்,வேலணை பிரதேச செயலாளர் எம்.நந்தகோபாலன் ஆகியோரும் கடல்படையினர் மற்றும் ஏராளமான பொதுமக்களும் பிரதேசத்தை விடுவித்து போக்குவரத்துத் தடையை நீக்கும் சம்பிரதாய வைபவத்தில் கலந்து கொண்டனர். தடை நீக்கப்பட்ட வீதிகளில் வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களை செலுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போக்குவரத்தை ஆரம்பித்து வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக