புதன், 27 அக்டோபர், 2010

பெண் வேடமிட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் கொலை செய்ய முடிவெடுத்தோம்

திருநங்கை மின்னல் மீனா கொலையில் 3 பேர் கைது
திருச்செந்தூர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த திருநங்கை சேக் அலி என்கிற மின்னல் மீனா(35),   கடந்த செப்டம்பர் மாதம் 17 ம் தேதி காலையில் காட்டுப்பகுதியில், கொலை செய்யப்பட்டு கிடந்தார். 
பிரேதத்தை கைப்பற்றிய ஆறுமுகநேரி போலீசார் கொலையாளிகளை தேடிவந்தனர்.

இக்கொலை தொடர்பாக காயல்பட்டணத்தில் புரோட்டா கடை வைத்துள்ள தாஜீதீன்(28), ஆட்டோ டிரைவர்கள் ஜாபர் சதீக்(24), ஹசன்(எ) முகம்மது ஹசன் (32) ஆகிய மூன்று பேரை  போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், ‘எவ்வளவு கண்டித்தும் கேட்காமல், இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு மாறாக, பெண் வேடமிட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால்  கொலை செய்ய முடிவெடுத்தோம்.
இதனால் செப்டம்பர் மாதம் 16 ம் தேதி இரவு மின்னல் மீனாவை கம்பால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டோம்’’என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பான  உமர் பாரூக் தலைமறைவாகவுள்ளார்.  அவரை   போலீசார் தேடிவருகின்றனர். 


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.