செவ்வாய், 26 அக்டோபர், 2010

இலங்கைக் கடல் எல்லையில் தமிழக அரசியல்வாதிகளின் படகுகள் : அமைச்சர் ராஜித சேனாரத்ன!

தமிழக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான படகுகளே இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாகக் கடற்றொழில் நீரியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இரவுப் பொழுதில் பெரும் எண்ணிக்கையிலான இந்தியப் படகுகள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் செய்மதியினூடாக அதற்கான ஆதாரங்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.செய்மதியினூடாகப் பெறப்பட்ட படங்கள் ஊடகவியலாளர்களுக்கு அதன்போது வழங்கப்பட்டது.

Such as T.R.Balu and Nepolian?

கருத்துகள் இல்லை: