அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டித் தொடரின் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கமொன்றை வென்றெடுத்தார்.
உலக ஊக்கமருந்து தடைப் பிரிவினால் தடை செய்யப்பட்டுள்ள நென்ரோலின் என்ற ஊக்க மருந்தினை மஞ்சு பயன்படுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட சோதனைகளின் மூலம் புலனாகியுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது.
குருணாகல் பிரதேசத்தில் வைத்து ஆறு மாதங்களுக்கு முன்னர் குறித்த மருந்தினைப் பயன்படுத்தியதாக மஞ்சு ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து இந்த தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மஞ்சு வன்னியாரச்சியின் வெற்றி இலங்கை முழுவதிலும் கொண்டாடப்பட்டதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக