ஞாயிறு, 10 அக்டோபர், 2010

புலிகளால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களும் உள்ளன. காங்கேசன்துறை வரையிலான

வட மாகாண அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு

வட மாகாணம் முன்னைய காலங்களிலும் பார்க்க இப்போது கூடுதலான கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தினால் மோசமாகச் சேதம டைந்த பிரதேசம் வட மாகாணம். அதனாலேயே உள்ளூர் கவனத்தை மாத்திரமன்றிச் சர்வதேச கவனத்தையும் ஈர்க்கும் பிரதேசமாக வட மாகாணம் விளங்குகின்றது.
வட மாகாண சேதங்கள் அனைத்தையும் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றவை என்ற வரையறைக்குள் அடக்க முடியாது. அத ற்கு முன்னால் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களும் உள்ளன. காங்கேசன்துறை வரையிலான புகையிரதப்பாதை புலிகளினாலேயே சேதப்படுத்தப்பட்டது.
வட மாகாணத்தின் மீள் நிர்மாணத்தில் அரசாங்கமும் சர்வதேசமும் அக்கறையுடன் ஈடுபடுகின்றன. இடம் பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்துக்காக வீடுகளை நிர்மாணித்தல், காங்கேசன்துறை வரையிலான புகையிரதப் பாதையை அமைத்தல், பலாலி விமான நிலையத்தைப் புனரமைத்தல் போன்றவை இந்திய அரசாங்கத்தி னால் மேற்கொள்ளப்படுகின்றன. கண்ணிவெடி அகற்றுதல் போன்ற பணிகளில் சர்வதேச அமைப்புகள் ஈடுபடுகின்றன. மீள்குடியேற் றத்துக்குத் தேவையான பொருட்களையும் சர்வதேச அமைப்பு கள் வழங்குகின்றன. இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் வட மாகாண அபிவிருத்திக்காகத் தாங்களாகவே முன்வந்து இவ் வுதவிகளைச் செய்யவில்லை. அரசாங்கத்தின் முயற்சியினா லேயே இவ்வுதவிகள் கிடைத்திருக்கின்றன. அரசாங்கமும் வட க்கின் அபிவிருத்திக்கு நேரடியாகப் பங்களிப்புச் செய்கின்றது. வடக்கின் அபிவிருத்திக்காகத் தனியாக ‘ஜனாதிபதி செயல ணியை’ அமைத்து அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக் கப்படுகின்றன.
அரசாங்கமும் சர்வதேசமும் வடக்கின் வளர்ச்சியில் செலுத்துகின்ற அக்கறை வடக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்களிடம் இல்லாதிருப்பது கவலைக்குரியது. தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புத் தலைவர்கள் குறைபாடுகளைக் கூறுவதுடன் தங்கள் பொறுப்பு முடிந்துவிட்டது என்ற பாணியில் செயற்படு கின்றார்கள். மக்களின் பிரதிநிதிகள் மக்கள் முகங்கொடுக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் நின்றுவிடாமல் அவ ற்றை நிவர்த்திப்பதிலும் பங்காளிகள் ஆகவேண்டும். அப்போது தான் அவர்களின் பிரதிநிதித்துவப் பொறுப்பு பூரணமடையும்.
வட மாகாணத்தில் இடம்பெறுகின்ற சகல அபிவிருத்தி நடவடிக்கை களிலும் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும். வடக்கு அபிவிருத்திக்கான செயலணியுடன் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் தொடர்புகொண்டு தங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். அரசாங்கத்துடனான கொள்கை ரீதியான வேறுபாடு மக்களின் நலனுக்காக அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதற்கு ஒரு போதும் தடையானதல்ல.
குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் நின்றுவிடும் அரசியல் மக்க ளுக்கு நன்மை பயப்பதல்ல. அவற்றை நிவர்த்திக்கும் செய ற்பாடுகளில் பங்காளிகளாகுவதே மக்களுக்கு நன்மை பயக்கும் நடைமுறை. அபிவிருத்திக்கு மாத்திரமன்றி இனப் பிரச்சினை யின் தீர்வுக்கும் இது பொருந்தும்.

கருத்துகள் இல்லை: