புதன், 9 ஆகஸ்ட், 2023

மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள்”.. மக்களவையில் கொதித்தெழுந்த ராகுல் காந்தி MP - முழு பேச்சு

கலைஞர் செய்திகள் - Lenin :  நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசு பேச வேண்டும் என வலியுறுத்த இந்தியா கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசும் போது பா.ஜ.கவினர் குறுக்கிட்டு கூச்சல் குழப்பம் செய்தனர். அப்போது ராகுல் காந்தி, "பா.ஜ.கவினர் பயப்படத் தேவையில்லை. இன்று நான் அதானியைப் பற்றிப் பேச மாட்டேன். எனவே பா.ஜ.கவினர் அஞ்ச வேண்டாம்" என தெரிவித்தார்.


பின்னர் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, உண்மையான இந்தியாவை எனது ஒற்றுமை நடைபயணத்தில் பார்த்தேன். இந்த நடைபயணத்தை தொடங்கும் போது எனக்கு முதலில் அச்சம் இருந்தது. ஆனால் நடைபயணத்தில் சிறையைக் கற்றுக்கொண்டேன். இந்திய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்தியாவில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதை நடைபயணத்தில் உணர்ந்தேன். பாஜக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனது நடைபயணம் முடிந்துவிடவில்லை. மீண்டும் தொடங்கும். பா.ஜ.க ஆட்சியில் நான் அவதூறுக்கும் சிறுமைப்படுத்தலுக்கும் ஆளாகி வருகிறேன். பிரதமர் மோடி விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார்.
 

கருத்துகள் இல்லை: