ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

ஜனாதிபதி ரணிலின் கோரிக்கையை ஏற்று பொதுநலவாய நாடுகளின் மாநாடு மூடி சூட்டு விழாவிற்கு முதல்நாள் ...

hirunews.lk  : பொதுநலவாய பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்கொட்லாண்ட் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து,
அரசர் மூன்றாம் சார்லஸ் தனது முடிசூட்டு விழாவுக்கு முதல் நாளான மே 5 ஆம் திகதி பொதுநலவாய தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களின் சிறப்புக் கூட்டத்தை நடத்த உள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க அண்மையில், ஸ்கொட்லாண்டுக்கு எழுதிய கடிதத்தில்,
பொதுநலவாயத்தின் புதிய தலைவராக சார்லஸ் மன்னன் அரியணை ஏறியதன் மூலம்,
பலமான பொதுநலவாயத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை நோக்கிய எதிர்காலக் கண்ணோட்டம் தொடர்பில் ஆழமான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.



பொதுநலவாய சங்கம் தற்போது 56 சுதந்திர நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இதன்படி பொதுநலவாய செயலகம் அமைந்துள்ள லண்டனில் உள்ள மார்ல்பரோ ஹவுஸில் சங்கத்தின் அரச தலைவர்களையும் அரசாங்கத் தலைவர்களையும் மூன்றாம் மன்னர் சார்லஸ் சந்திப்பார்.

இதேவேளை மன்னரின் ஜனாதிபதி விக்ரமசிங்க முடிசூட்டு விழா மற்றும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை: