ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

திமுக- மதிமுக இணைப்பு: துரை வைகோ பதிலால் கடுப்பான துரைசாமி

 மின்னம்பலம் -  christopher : மதிமுகவை, திமுகவுடன் இணைத்து விடலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு அக்கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி கடிதம் எழுதினார். இந்நிலையில்,
மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ திமுக-மதிமுக இணைப்பில் உடன்பாடில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, நேற்று (ஏப்ரல் 29) வைகோவுக்கு எழுதிய கடிதத்தில்,
மகனை ஆதரித்து அரவணைப்பதும்,
தங்களின் சந்தர்ப்பவாத அரசியலும் தமிழ்நாடு மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது.” என்று அவர் தெரிவித்தார்.


மேலும் கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுவது சம கால அரசியலுக்கு சாலச் சிறந்தது என்றும் துரைசாமி சாடினார்.

அவரின் இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மை கிடையாது என்று மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ விளக்கமளித்தார்.

மேலும், திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்குத் துளியும் உடன்பாடில்லை.

திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது.

பொதுக்குழுவில் பேச வேண்டிய விஷங்களை பொதுவெளியில் மனக்கசப்பு காரணமாக திமுக- மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என்று துரை வைகோ தெரிவித்தார்.

இதற்கிடையே திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் மூத்த நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது துரை வைகோவின் குற்றச்சாட்டு குறித்து பேசுகையில்,

“துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. வைகோ பதில் சொன்னால் பதில் சொல்லலாம்.
அவர் குற்றச்சாட்டு சொன்னாலும் அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தேவையில்லாமல் மற்றவர்களின் கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல தயாரில்லை” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: