வியாழன், 4 மே, 2023

திமுக அமைச்சரவையில் 4 பேருக்கு கட்சிப்பணி? துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வாய்ப்பு?

tamil.oneindia.com -  Shyamsundar : சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து 4 சீனியர்கள் நீக்கப்படலாம், துணை முதல்வர் பதவி கொண்டு வரப்படலாம் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.
Is CM Stalin planning for a debuty chief minister post and What are the 4 changes expected in cabinet?
முக்கியமாக அமைச்சரவை மாற்றம் பற்றி இதில் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இந்த அமைச்சரவை கூட்டம் நடக்க முதல் காரணம், முதல்வர் ஸ்டாலின் கைக்கு சென்று இருக்கும் பர்பார்மன்ஸ் ரிப்போர்ட். பொதுவாக அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் பற்றி ரிப்போர்ட் முதல்வர் கைக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் செல்வது வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட்டை வைத்து அமைச்சர்களின் நிறை, குறைகளை முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கு டோஸ் விடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இது போக இலாக்கா மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதாவது சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாக்கா குறைக்கப்பட்டு அதில் புதிய அமைச்சர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

பில்கிஸ் பானு வழக்கு- விடுதலையானவர்களின் வழக்கறிஞர்களுக்கு செம்ம டோஸ் விட்ட உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கு- விடுதலையானவர்களின் வழக்கறிஞர்களுக்கு செம்ம டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்

2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக திமுக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தற்போது அமைச்சர்களின் பர்பார்மன்ஸ் அடிப்படையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.


இது தொடர்பான ரிப்போர்ட் ஒன்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளதாம். உளவுத்துறை மூலமாக வழங்கப்பட்ட பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் மூலம் இந்த அமைச்சரவை மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இருக்காது. அவர்களின் துறைகள் மாற்றப்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அமைச்சரவை மாற்றத்தின் போது சீனியர்கள் மீது ஸ்டாலின் கை வைப்பாரா என்ற கேள்வி உள்ளது. சில சீனியர்கள் மீது அவர் கை வைக்க மாட்டார். எனக்கு வந்த தகவலின்படி, சில சீனியர்களை முழு நேர கட்சி பணி பார்க்க அனுப்ப வாய்ப்பு உள்ளது.

முழு நேர கட்சி பணி பார்க்க 4 பேரை அனுப்ப வாய்ப்பு உள்ளது. 4 சீனியர்களை முழு நேரமாக கட்சி பணி பார்க்க மத்திய, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று ஸ்டாலின் அனுப்ப வாய்ப்பு உள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து சிலரை அனுப்பிவிட்டு அவர்களை முழு நேர கட்சி பணி செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும்.

கட்சியில் அவர்களுக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து, மரியாதையாக தேர்தல் பணிகளை செய்ய அனுப்பலாம். அவர்களுக்கு கட்சியிலும் முக்கியமான பொறுப்பு வழங்கப்படும். 2024 வரை இங்கே வேலை செய்யுங்கள் என்று சொல்லலாம்.

அதேபோல் துணை முதல்வர் நியமனம் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன. உதயநிதி ஸ்டாலினை நியமிக்கலாம். அதை மேலிடம் மறுக்கலாம். உதயநிதி ஸ்டாலின் கூட மறுக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

அவர்கள் இல்லை என்று மறுக்கலாம். அரசியலில் எதையும் இல்லை என்று மறுக்க முடியாது. உதயநிதிக்கு விரைவில் முக்கிய துறை வழங்கப்படலாம். உள்ளாட்சி துறை அவருக்கு கொடுக்கப்படலாம். உள்ளாட்சி துறை தற்போது இரண்டு துறையாக உள்ளது.

அதை ஒன்றாக மாற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கலாம். ஆனால் திமுகவிற்கு சில சங்கடமான விஷயங்கள் தற்போது இருப்பதால் இப்போதைக்கு அவர்கள் அதில் கை வைக்க மாட்டார்கள். விரைவில் முடிவு எடுக்கலாம். சில மாதங்கள் ஆறப்போட்டு அதன்பின் முடிவு எடுக்கலாம்.

கருத்துகள் இல்லை: