திங்கள், 22 ஆகஸ்ட், 2022

செப்டம்பர் இனி ‘திராவிட மாதம்’! மறக்கமுடியாத பல வரலாற்று நிகழ்வுகளை கொண்ட மாதம்

tamil.oneindia.com - Rajkumar R  :   செப்டம்பர் இனி ‘திராவிட மாதம்’!
சென்னை : திராவிட சிறப்புகளை அனைத்து மாவட்ட மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் வரும் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக கொண்டாடப்படும் என திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம் அந்த அணியின் செயலாளர் டி ஆர் பி ராஜா எம்எல்ஏ தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.
திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில மாவட்ட மற்றும் பல்வேறு அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
டிஆர்பி ராஜாஇந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி ராஜா திராவிட சிறப்புகளை அனைத்து மாவட்ட மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் வருகின்ற செப்டம்பர் மாதம் திராவிடம் மாதமாக கொண்டாடப்படும் என கூறினார். செப்டம்பர் மாதத்தை ஏன் திராவிட மாதமாக கொண்டாட வேண்டும் என்பது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பல்வேறு விளக்கங்களும் சமூக வலைதள பதிவுகளும் இணையத்தில் உலா வருகின்றன.

செப்டம்பர் மாதம்
அதில்,"செப்டம்பர் மாதம் திராவிட இயக்க அரசியலில் முக்கியமான நிகழ்வுகள் நடந்த மாதம். பெரியார், அண்ணா இருவரும் பிறந்த மாதம் என்பதற்காகவே செப்டம்பரைக் கொண்டாடலாம். ஆனால், இவர்கள் இருவரை மட்டுமே செப்டம்பர் வழங்கவில்லை.
இன்னும் சில ஆயுதங்களையும் படிப்பினைகளையும்கூட தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. காங்கிரஸின் எதிரி என்பதற்காக மட்டும் நீதிக்கட்சியை வழிநடத்த பெரியார் ஒப்புக்கொள்ளவில்லை.

திராவிட மாதம்
அவர் ஒரு வேலைத் திட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கும் நீதிக்கட்சிக்கும் அனுப்பி வைத்தார். விவசாய நலன், தொழிலாளர் நலன் என சோஷலிசப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த அந்த வேலைத் திட்டத்தில் ‘மதங்கள் அரசியலில், நிர்வாகத்தில் எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும்' என்பதான கருத்துகளும் இருந்தன. காங்கிரஸ் அதை நிராகரிக்க நீதிக்கட்சி அதனை ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொண்ட தினம் 1934-ம் ஆண்டு 29-ம் தேதி செப்டம்பர் மாதம்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் படை
ஆண்டு தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் படை ஒன்று உருவானது. பாவேந்தர் பாரதிதாசனின் பாடலைப் பாடியபடியே ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டது அப்படை. திருச்சி உறையூரில் தொடங்கி 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி, 42 நாட்களாக நடந்த நெடும்பயணம் நிறைவுற்ற தினம் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி." எனவே தான் செப்டம்பர் மாததை திராவிட மாதமாக கொண்டாட முடிவு செய்திருப்பதாக ஐடி விங் நிர்வாகிகள் பதிவிட்டு வருகின்றனர்.
English summary
TRP Raja, secretary of DMK information technology team, said that September will be celebrated as Dravida month in order to highlight Dravidian specialties to the people of all districts

கருத்துகள் இல்லை: