சனி, 3 டிசம்பர், 2022

ஆறாம் வகுப்பு பாடத்தில் சீட்டுக்கட்டு பகுதியை நீக்கிவது பெரிய முட்டாள்தனம்... Probability theory, complex systems என்றால் பகடை காய்கள், சீட்டுக்கட்டு ..

Probability theory, complex systems பற்றி படிக்க வேண்டும் என்றால் பகடை காய்கள், சீட்டுக்கட்டு போன்றவை மிக அடிப்படையான எளிய உதாரணங்கள்
May be an image of 1 person and text

Karthikeyan Fastura  :  ஆறாம் வகுப்பு பாடத்தில் சீட்டுக்கட்டு பற்றிய பகுதியை எதிர்ப்புகள் எழுந்ததால் நீக்கி இருக்கிறார்களாம்.
இதை நீக்குவதை விட பெரிய முட்டாள்தனம் சமீபத்தில் நான் பார்த்ததில்லை.
இதற்கு இவர்கள் கூறும் காரணம் சீட்டுக்கட்டு பிள்ளைகளை கெடுத்து விடும்,
ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் என்று. ஆனால் இந்த பாடத்திட்டத்தை மிகச் சரியாக மாணவர்களிடம் கொண்டு சேர்த்தால் அவர்கள் இந்த விளையாட்டிற்குள் வராமல் இருக்கவே செய்வார்கள்.


நான் இளங்கலை கணிதம் படித்தவன். Probability theory, complex systems பற்றி படிக்க வேண்டும் என்றால் பகடை காய்கள், சீட்டுக்கட்டு போன்றவை மிக அடிப்படையான எளிய உதாரணங்கள். அதனை வைத்து தான் எங்களுக்கு விளக்குவார்கள். கேள்வித்தாளும் அப்படித்தான் இருக்கும்.
நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும் நம்மை வைத்தும் probability theory இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

ஜான் போர்பஸ் நாஸ் உருவாக்கிய  Nash equilibrium நம் அன்றாட வாழ்க்கைக்கும் அரசியல், பொருளாதார நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பை complex system வாயிலாக விளக்க முற்பட்டிருப்பார். இவர் ஒரு கணித பேராசிரியர் என்றாலும் இந்த விதி பொருளாதார உலகில் ஏற்படுத்திய தாக்கத்திற்காக இவருக்கு நோபல் பரிசு பொருளாதாரப் பிரிவில் கிடைத்தது.

The beautiful mind திரைப்படத்தின் கதையே இவரை பற்றி தான் .
தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் இது போன்ற பிற்போக்குத்தனங்கள் நிறைய இருக்கின்றன. கொஞ்ச நாளைக்கு முன்பு யாரோ ஒரு அயோக்கியன் பெட்ரோல் குண்டு வீசி விட்டான் என்று அனைத்து பெட்ரோல் பங்குகளிடமும் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்கக் கூடாது என்ற விதியை திணித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் இதனால் நான் ஒன்னரை கிலோமீட்டர் வண்டியை தள்ளிக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது. அதாவது என்னிடம் பெட்ரோல் கேன் இருந்தும் ஆட்டோக்காரர் உதவி செய்தும் பெட்ரோல் பங்கில் இந்த விதி இருந்த காரணத்தினால் அங்கே பெட்ரோல் பிடித்து எனது வாகனத்தில் நிரப்ப முடியாமல் எனது வாகனத்தை கொடும் வெயிலில் தள்ளிக்கொண்டே வரச் செய்தது இந்த முட்டாள்தனமான விதி.

இந்த விதியினால் பெட்ரோல் வெடிகுண்டு செய்யாமல் தவிர்த்திட முடியுமா?! வண்டியில் பெட்ரோல் பிடித்து அதனை ஒரு பாட்டிலில் நிரப்பி அதை பெட்ரோல் குண்டாக ஒருவன் பயன்படுத்த முடியாதா.? பிறகு ஏன் இந்த முட்டாள்தனமான விதி.? இதை விதித்தவர் கொஞ்சமேனும் யோசிக்க மாட்டாரா.? Statistics, probability theory பற்றிய அடிப்படை கணிதத்தை அவர் பள்ளியில் படித்திருந்தால் இந்த முட்டாள்தனமான விதியை விதித்திருக்க மாட்டார்.
யாரோ ஒருவன் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்.? இது பிற்போக்குத்தனம் இல்லையா..

கருத்துகள் இல்லை: