வியாழன், 1 டிசம்பர், 2022

திமுக அணிகளுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்கள்... தகுதியானவர்களா?

May be an image of 9 people and people standing

Kandasamy Mariyappan  :   திமுகவில் சமீபத்தில் பல அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டள்ளனர்.!
மகிழ்ச்சி, நல்ல செயல்.!
நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட வேண்டும்.!
இரண்டாண்டுகள் கழித்து அவரின் செயல்பாடுகளில் திருப்தி இருந்தால் மட்டுமே தொடர அனுமதிக்க வேண்டும்.!
பொதுவாக மேட்டிமை மக்கள், மருத்துவர்கள், பெரிய நிறுவன ஊழியர்கள், அரசு பணியாளர்கள் மத்தியில் திமுக ஒவ்வாமை நிறையவே உள்ளது.!
இந்த ஒவ்வாமை எண்ணத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு இந்த நிர்வாகிகளுக்கு நிறையவே உள்ளது.!
திமுக ஆட்சியின் செயல் திட்டங்களால் 80, 90களில் மருத்துவர்களாக வந்தவர்கள்,
 இன்று தீவிர திமுக எதிர்ப்பாளர்களாக இருப்பது மட்டுமல்லாமல் பலர் வலதுசாரிகளாகவே மாறி விட்டனர்.


எனக்கு தெரிந்த வேளாளர், முக்குலத்தோர் சமூக மக்கள் இன்று RSS நிர்வாகிகளகவே மாறி விட்டனர்.!
கலைஞர்., BCயில் இணைத்ததால் மருத்துவர்களாக வந்து, பிறகு அவர்களின் பிள்ளைகளையும் அதே பிரிவை பயன்படுத்தி மருத்துவர்களாக உருவாக்கி கலைஞரையும் திமுகவையும் எதிர்ப்பதே குறிக்கோளாக இருப்பவர்கள் வேளாளர் சமூக மக்கள்.!
முன்னாள்களின் பிள்ளைகளை மருத்துவ அணி தலைவராக, செயலாளர்களாக நியமிப்பதில் தவறில்லை.!
ஆனால்..,
1. அவர்களின் செயல்பாடுகள் மருத்துவர்கள் மத்தியில் திமுக பற்றிய நல்ல எண்ணத்தை உருவாக்க உழைக்க வேண்டும்.!
2. கட்சி தலைவர்களின், இளைஞரணி செயலாளரின் பிறந்தநாட்களில் ரத்த தானம் செய்வது, சில மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்குவது இவர்களின் பணிகளாக இருப்பது கூடாது.!
அதனை கிளை, ஒன்றிய செயலாளர்கள் செய்வார்கள்.!
3. எனக்கு தெரிந்த வலதுசாரி சிந்தனை உள்ள மருத்துவர்கள் சிலர் துறை சார்ந்த மருத்துவர்கள் மாநாடுகளில் ஜக்கி போன்றவர்களை அழைத்து ஆன்மிக சொற்பொழிவாற்ற வைக்கின்றனர்.!
4. ஆனால் எத்தனை மாநாடுகளில் பெரியாரிய சிந்தனையாளர்களை பேச்சாளர்களாக ஏற்பாடு செய்துள்ளனர்.!
5. எனவே மருத்தவரணி தலைவர், செயலாளர்கள் துறை சார்ந்த மருத்துவ கூட்டமைப்பில் முக்கிய பொறுப்புகளுக்கு வர வேண்டும்.!
6. துறை சார்ந்த மருத்துவர்கள் மாநாடுகளில் சுகாதாரத்துறை அமைச்சர், நிதியமைச்சர் போன்றவர்களை சிறப்பு பேச்சாளர்களாக ஏற்பாடு செய்ய வேண்டும்.!
7. தொலைக்காட்சி விவாத தளங்களில் கலந்து கொள்ள வேண்டும்.!
தேசிய அளவிலான விவாதங்களில் கட்டாயம் கலந்து கொண்டு சரியான விவாதத்தை வைக்க வேண்டும்.!
8. அவர்களின் சமூக வலைதள பக்கங்களில், You Tube channelகளில் மருத்துவ துறை பற்ளிய நிறைய Dataக்களை நிரப்பி வைக்க வேண்டும்.!
எத்தனை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், எத்தனை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு தாலுக்கா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், எத்தனை வெளி நோயாளிகள், எத்தனை உள் நோயாளிகள், எத்தனை அறுவை சிகிச்சைகள், Cardiac, Neuro, Orthopaedic சிறப்பு அறுவை சிகிச்சைகள் எத்தனை, எத்தனை பிரசவங்கள் போன்ற தகவல்களை இவர்களது பக்கங்களில் எப்போதுமே இருக்க வேண்டும்.!
எவ்வளவு மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன போன்ற தகவல்களை இவர்களது பக்கங்களில் எப்போதுமே இருக்க வேண்டும்.!
9. மருத்துவ துறைக்கு திமுகவின் சாதனைகளை பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.!
இவற்றையெல்லாம் விட்டு விட்டு எப்படி சம்பாதிப்பது, எப்படி சுய தம்பட்டம் அடிப்பது என்று இருந்தால்., மருத்துவர்கள் மத்தியில் கட்சியின் மதிப்பு மேலும் சரியும்.!
சம்பாதிக்க கூடாது, சுய தம்பட்டம் அடிக்க கூடாது என்று சொல்லவில்லை.,
ஆனால் நிர்வாகி பொறுப்பை ஏற்றுக் கொண்டு இதனை செய்யாதீர்கள் என்கிறேன்.!

கருத்துகள் இல்லை: