வெள்ளி, 23 டிசம்பர், 2022

கூர்வாளின் நிழலில் தமிழினியின் ( புலிகளின் மகளிர் அணித்தலைவி) கணவர் தோழர் ஜெயன் தேவா காலமானார் .. லண்டனில் ..

Image result for கூர்வாளின் நிழலில்
விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணி தலைவியின் கணவர் உயிரிழப்பு | Ltte S Former Women S Team Leader S Husband Dies
jvpnews.com - Sulokshi : புலிகளின் போராளியாகவும், மகளிர் அணி  -  அரசியல் பிரிவுகளின் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினியின் கணவர் காலமானார்
இவர்  சமூக, அரசியல் செயற்பாட்டாளரும்,  எழுத்தாளருமாவார்
சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    
தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ (சுயசரிதை) ‘மழைக்கால இரவுகள்’ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை தமிழினியின்  மறைவையடுத்து வெளியிட்டார். இந்நிலையில் யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியான மகாதேவன் ஜெயக்குமரனின் மறைவு உலகெங்கும் உள்ள ஜனநாயகவாதிகளுக்கும் மனித உரிமையாளர்களுக்கும்  தமிழ் உணர்வாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

 Suhan Kanagasabai  :  இரண்டு கல்வியாளர்கள் அருகருகான வீட்டில் வசித்தனர்.
இந்திய அமைதிப்படைக்கு மொழிபெயர்ப்பு மற்றும் பொதுமக்களுக்கான அன்றாட சிக்கல்களை நிவர்த்திக்கும்பொருட்டு அப்பிரதேசத்தில் ஒரு தகைமையாளர் தேவைப்பட்டார்.
மகாதேவா எனும் ஜெயன் தேவாவின் தந்தையாரை அவர்கள் அணுகினர்.
மற்றக் கல்வியாளர் உடனேயே பின்னடித்துக்கொண்டார்.
மகாதேவாவைச் சுடவந்த புலிகளுக்கு அங்கு ஒரு குழப்பம் வந்தது ,
தாம் சரியானவரைத்தான் சுடவந்தோமா என்பதல்லாமல் எந்த வீடு என எவருக்கும் இக் குழப்பம் வரத்தான் செய்யும். சில நேரங்களில் காலபலனைப்பொறுத்து மிகத்தெளிவாகவும் கடும் குழப்பத்துடனும் அவ் எத்தனங்கள் ,முயற்சிகள் அமைந்துவிடும் ,அல்லது வாய்த்துவிடும்.
ஒருமுறை ஒருவீட்டில் சுடப்போனவர்கள் அந்த வீட்டின் விருந்தினராக வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவரைச் சுட்டுவிட்டுப்போனார்கள் .


வெளியே இருந்து சண்முகலிங்கம் ! என கூப்பிட சாப்பிட்டுக்கொண்டிருந்த விருந்தினர் அந்நேரம் அவ் வீட்டில் சண்முகலிங்கம் இல்லாததால் அவரே வாசலுக்கு வந்து என்ன விசயம் ? எனக் கேட்டிருக்கிறார் , சூடு. சாப்பிட்ட கை .
அப்படி ஜெயன் தேவாவின் தந்தையைச் சுட வந்தவர்கள் அவர் அயலார் வீட்டை போய் மகாதேவா ! என கேட்க எதுவும் பேசாமல் கையால் அயல்வீட்டைக் காட்டினார் அயலவர் . அயலில் சூடு.
யாழ் பல்கலையின் மாணவரான ஜெயன் தேவா தன் காலத்தில் ஒரு இடதுசாரிச் சிந்தனையோடு ஒரு அமைப்பில் இயங்கினார் .
அங்கு பயின்ற மானவர்கள் சிலரைச் சுட்டு முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் வந்தபோது ஜெயன் தேவா லண்டனுக்கு வந்துசேர்ந்தார்.
சிறந்த வாசிப்பும் தன் மாணவப்பருவதிலிருந்தே ஒரு கல்விசார் ஒழுங்கமைப்பாளராகவும் ஒரு இயக்க அமைப்பாளராகவும் இருந்த நிலையில்  தமிழினியின் தொடர்பில் அவரது எழுத்தின் முக்கியத்துவம் கருதி "ஒரு கூர்வாளின் நிழலில் "என்ற அவரது தன்வரலாற்று நூலை வெளிக்கொண்டுவந்தார்.

கொலைவெறி மன நிலையிலிருந்து எப்போதும் விடுபடவிரும்பாத புலிப்பாசிசத்தின் ஆதரவாளர்களுக்கு தமிழினியின் இந்நூல் ஒரு சங்கடத்தைக் கொடுத்தது .
தங்களை மிகவும் கவனமாகத் தற்காத்துக் கொள்ளவும் பாலகர்களையும் அப்பாவிகளையும் போர்முனையை நோக்கி இழுத்துச்செல்லும் ஒரு போர்விதிக்கு பரணி பாடிக்கொண்டுமிருந்த இந்த அகர முதல்வர்கள் இந்நூலால் மிகவும் அவமானம் அடைந்தனர் . உண்மையும் சுடும்.

'சாகாள் 'என்றொரு வக்கிரமான கதையொன்றை எழுதி தனது வக்கிரத்தைக் கொட்டிய முதல்வம் பின் கடும் எதிர்ப்பால் அக் கதையை தன் எச்சிலைத் துப்பி அழிக்கவேண்டியதாயிற்று.
இப்படியாக ஒரு போரை நடத்தவும் அதன் அழிவுகளைக் கண்டு மீளாய்விற்கு உட்படுத்தவும் ஒரு திறந்த பெரும் ஆன்ம பலம் வேண்டும் .
அஜித் போயகொடவின் "நீண்ட காத்திருப்பு" இன்னொரு கனதியான தன் நினைவு . ஒட்டுண்ணிகளுக்கும் பிழைப்போருக்கும் இவை எப்போதும் விளங்கப்போவதுமில்லை, வாய்க்கப்போவதுமில்லை.

மிகக் காரியார்த்தமாகவும் நுட்பமாகவும் நிதானத்தோடும் தன் மாணவ மற்றும் இறுதிக்காலங்களை அர்த்தப்பெறுமானத்தோடு வாழ்ந்து கடந்த தோழர் ஜெயன் தேவாவிற்கு கனத்த இதயத்தோடு அஞ்சலிகள்.
துயரார்ந்த வழியெங்கும் வாழ்வு தன் பொருளை எப்போதும் தவறவிடுவதில்லை.

Fauzer Mahroof : தமிழகத்தில் வாழவும் நேர்ந்தது…

Veeranmani Balamurugan : ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

 Yoharaja Alvar : அண்மையில் வரை எனது முகநூலில் நட்பாக இருந்திருக்கிறார். ஆனால் தமிழினியின் கணவன் என்று தெரியாமலே! Sooo… sad! ஆத்மார்த்த அஞ்சலிகள்!

Nithiyanandan Muthiah :  ஜெயக்குமார் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் எனது மாணவராக இருந்தவர்.
சமூக உணர்வு கொண்ட- மனித நேயம் மிக்க -துடிப்பான இளங்குருத்துகளில் அவர் ஒருவர்.
தாங்கள் அடையத் துடித்த உலகம் வசமாகப் போகாதநிலையில் நெஞ்சிழந்து போன தலைமுறை அது.சென்னையில் திருவான்மியூரில் நாங்கள் ஒரே மாடித்தொகுதியில் குடியிருந்தோம்.
அவர் அவரது அம்மாவோடும் சகோதரியோடும் இருந்தார்.
 சற்று விரக்தியுற்ற நிலையில் அவர் இருந்ததை அவதானித்திருக்கிறேன்.
பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக்கொண்டு, வளமான வாழ்வைத் தேடவேண்டிய வயதில், வேரிழந்து, வாழ்விழந்து நின்ற நிலை குறித்து நான் பெரிதும் வருந்தியிருக்கிறேன்.
பின் மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின் மீண்டும் லண்டனில் சந்தித்தேன்.
வீட்டிற்கு அடிக்கடி வருவார்.
மீனாவை 'அக்கா' என்று அன்பு நிறைய அழைப்பார்.
ஓரிரு கட்டுரைகளை எனக்கு அனுப்பி அவற்றை இலங்கைப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்வித்திருக்கிறேன்.
லெளகீக வாழ்க்கைத் தேட்டத்தில் அவர் எப்போதுமே நம்பிக்கையற்றவராகவே இருந்து வந்திருக்கிறார். அனஸ்லி அவர்கள் செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டு ஜெயகுமாரைத் தேடி அவர் எங்கிருக்கிறார் என்று விசாரித்தபோதுதான், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டேன்.
அவரது இறுதிச் செய்தி பெருஞ் சோகத்தை நெஞ்சில் விதைத்திருக்கிறது.
உங்களின் படத்தைப் பார்க்கும்போது, அந்த முகம் இன்று இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
சென்று வாருங்கள், ஜெயகுமார். கனத்த நெஞ்சோடு மீனாவோடு எனது துயர் அஞ்சலி.

Fauzer Mahroof தமிழகத்தில் வாழவும் நேர்ந்தது…

Veeranmani Balamurugan  :  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

Yoharaja Alvar : அண்மையில் வரை எனது முகநூலில் நட்பாக இருந்திருக்கிறார். ஆனால் தமிழினியின் கணவன் என்று தெரியாமலே! Sooo… sad! ஆத்மார்த்த அஞ்சலிகள்!

Manimegalai Thirunavukkarasu ஆழ்ந்த இரங்கல்... என்ன ஆயிற்றாம் அவருக்கு... உடல் நலமின்றி இருந்தவரா...

Sritharan Thirunavukarsu : தாங்கொணா துயரம். ஆழ்ந்த இரங்கல்கள். எம் அஞ்சலிகள்!

Narayana Moorthy : உண்மையும் சுடும்.

R Rahavan சில புலிப்பாசாங்கு பெயராசிரியர்களுக்கு உண்மை கூடுதலாக சுடுதாம். என்னவென்று சொல்ல???

கருத்துகள் இல்லை: