புதன், 21 டிசம்பர், 2022

"மிஸ்டர் க்ளீன்" வந்தாச்சு.. ஒருத்தரும் தப்ப முடியாது.. கண்சிவந்த திமுக மேலிடம்.. யாரந்த "புள்ளிகள்"

 tamil.oneindia.com - Hemavandhana  :  சென்னை: அடுத்தக்கட்ட அதிரடியை கையில் எடுக்க போகிறதாம் திமுக.. அதற்கான காய் நகர்த்தல்களும், முன்னெடுப்புகளும் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. தேசிய கட்சிகள் இதற்கு தயாராகி வரும் நிலையில், திமுகவும் அதற்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறது.. மற்றொருபுறம், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பதிலும் ஸ்டாலின் ஆர்வம் காட்டி வருகிறார்..
எப்போதுமே தேர்தல் சமயங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் சபரீசன் மேற்கொண்ட முயற்சிகளும், அதுகுறித்த களஆய்வும், மேலிடத்துக்கு பேருதவியாக இருந்து வருவதை மறுக்க முடியாது.
திமுக-பாஜக கூட்டணி வைக்கும் என சிவி சண்முகம் 'எத்தனை மணிக்கு பேசினாரு'.. அமைச்சர் கே.என்.நேரு பொளேர் திமுக-பாஜக கூட்டணி வைக்கும் என சிவி சண்முகம் 'எத்தனை மணிக்கு பேசினாரு'.. அமைச்சர் கே.என்.நேரு பொளேர்



ஸ்பெஷல் ரிப்போர்ட்
சட்டசபை தேர்தலின்போது, திமுகவுக்காக பணியாற்றிய ஐபேக் டீம், ஒவ்வொரு மாவட்ட செயலாளர் பற்றியும், ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்டை ஆய்வு செய்து தந்திருந்தது.. இந்த ரிப்போர்ட்டின்படி, திமுகவின் வெற்றிக்காக அரும்பாடுபட்டவர்கள் யார்? அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை சபரீசன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்... கடந்த 4 மாதங்களுக்கு முன்புகூட ஒரு செய்தி கசிந்தது.. அதாவது, திமுகவின் ஆட்சியில் இதுவரை சிறப்பாக பணியாற்றிய மா.செ.க்கள் யார் என்று ஆராய்ந்து, அது பற்றின ஒரு லிஸ்ட்டை திமுக மேலிடம் தயார் செய்ததாம்.

பச்சை சிகப்பு
பச்சை, ஆரஞ்சு, சிகப்பு என்ற ரீதியில் மா.செ.க்கள் அந்த லிஸ்ட்டில் வரிசைப்படுத்தப்பட்டு, அதனடிப்படையில் மா.செ.க்கள் நியமனம் இருக்கும் என்று கூறப்பட்டது.. அதுமட்டுமல்ல, 70 வயதுக்கு மேற்பட்ட மா.செ.க்களை மாற்றியமைத்து அந்த மாவட்டங்களில் இளைஞர்களை மா.செ.வாக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம், உதயநிதி ஏற்கனவே ஒரு கோரிக்கையை வைத்திருந்தாராம்.. அதுபோல, "சீனியர் மா.செ.க்கள் பலரும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.. அமைச்சர் பதவியில் அவர்கள் இருப்பதால் கட்சி பதவியிலிருந்து அவர்களை விடுவிக்கலாம்" என்று தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஸ்டாலினிடம் சபரீசனும் யோசனை சொன்னாராம். .

சபாஷ் சபரீசன்
உதயநிதியும், சபரீசனும் ஸ்டாலினிடம் இப்படி மாறி மாறி முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அதுகுறித்து முதல்வர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு தகவலும் வட்டமடித்து வருகிறது. கடந்த முறை தேர்தலின்போது, தமிழகம் முழுவதும் ஐ-பேக் ஊழியர்கள் களமிறங்கி வேலை செய்தபோது, அவர்களில் சிலரை திமுகவில் ஒருசில சீனியர்கள் தங்கள் வசப்படுத்தி கொண்டதாகவும், அதனாலேயே உண்மையான களநிலவரம் திமுக மேலிடத்துக்கு தெரியாமல் போய்விட்டதாகவும் செய்திகள் கசிந்தன.

PLAN 1
இப்படியான குழப்பங்கள் எதுவுமே வரும் தேர்தலில் வரக்கூடாது என்பதற்காகவே, புது வியூகம் ஒன்று கையில் எடுக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, ஐ - பேக் டீம் தந்த தரவுகளின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் திமுகவுக்குள்ளேயே உளவுப்படை ஒன்றை உருவாக்க போகிறதாம் திமுக மேலிடம்.. அதன்படி, உளவுப்படை தளபதி ஒருவர் தலைமையில், இந்த டீம் செயல்படும்.. சட்டப்பேரவை தொகுதிகளில் தலா ஒருவர் வீதம் உளவுப்புள்ளிகள் இடம்பெறுவார்கள்.. இவர்கள் தங்களுக்கு கீழே வரும் நகரம், ஒன்றியங்களுக்கு தலா ஒருவர் வீதம் உளவு நபர்களை நியமிப்பார்கள்.. இதுதான் அந்த உளவுப்படையாம்..

ஜஸ்ட் பாஸ்
இந்த உளவுப்படையில் இடம்பெறுபவர்கள் "மிஸ்டர் கிளீன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கை சுத்தமாகவும், தவறு என்று தெரிந்தால் அதை சுட்டிக்காட்டும் துணிச்சலும் நிறைந்தவர்களாகவும் இருப்பார்களாம். இந்த உளவுப்படையின் வேலை என்னவென்றால், திமுக பொறுப்பாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், என அனைவரின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து, மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்புவதாகும்.. அப்படிப்பட்டவர்களை தேர்வு செய்யும் பணிதான் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அநேகமாக அடுத்த மாதம் இந்த டீம் தங்கள் களப்பணியில் இறங்கும் என்கிறார்கள்... இந்த உளவுப்படையின் முதுகெலும்பாக சபரீசன் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

PLAN 2
கடந்த முறை தேர்தலின்போது, அபார வெற்றியை திமுகவால் பெற முடியவில்லை.. ஜஸ்ட் பாஸ் வெற்றியைதான் திமுகவால் எடுக்க முடிந்தது என்றால், அதற்கு காரணம், தேர்தல் சமயத்தில் நடந்த உள்ளடி வேலைகள்தான் என்றார்கள். அதிலும் கொங்கு மண்டலம் திமுகவை நிறையவே சறுக்கிவிட்டது.. இது தொடர்பான வருத்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.. கூடுதலாக, 20 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே அவரது கணக்காக இருந்தது.. அதனால்தான், ஆட்சி பொறுப்பேற்றதுமே, திமுகவின் கோட்டையாக மாற்ற கொங்கு வியூகம் தனியாக முன்னெடுக்கப்பட்டது.. அதில் பிரதான வெற்றியும் தற்போது கிடைத்து வருகிறது.
மாப்பிள்ளை சபரீசன்

மாப்பிள்ளை சபரீசன்
அந்தவகையில், விட்டதை பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், உள்ளடி வேலைகள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவும், திமுக மேலிடம் இப்படி ஒரு உளவுப்படையை களமிறக்குவதாக கூறப்படுகிறது, மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.. அத்துடன் அடர்ந்த நம்பிக்கையையும் திமுகவினர் மத்தியில் ஏற்படுத்தியும் வருகிறது.. உதயநிதி + சபரீசன் இருவரும் கைகோர்த்து களமிறங்கும் இந்த அதிரடியை பார்த்து, வழக்கம்போல, சில சீனியர்களுக்கு எரிச்சலையும், கடுப்பையும் இது ஏற்படுத்தியும் வருகிறதாம்.. அதேபோல, மாவட்ட செயலாளர்கள் நியமனத்திலும் விரைவில் ஒரு மாற்றம் இருக்க போவதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.. பார்ப்போம்..!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

English summary

Mastermind plan and What are the 2 Strategies of Sabarisan and Udayanidh

கருத்துகள் இல்லை: