புதன், 21 டிசம்பர், 2022

கலிபோர்னியா.. 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! 70,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு

tamil.oneindia.com  - Halley Karthik :  நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. தற்போது வரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
வடக்கு கலிபோர்னியாவில் அதாவது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சுமார் 345 கி.மீ தொலைவில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் சுமார் 6.4 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் சில சரிந்து விழுந்துள்ளன.
இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் 11 பேர் வரை காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பொதுவாக ரிக்டர் அளவு 5ஐ விட அதிகமாக நிலநடுக்கம் பதிவானாலே கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ஆனால் இந்த நிலநடுக்கத்தில் பெரிய பாதிப்புகள் பதிவாகவில்லையென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது, "சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஒரு சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருக்கிறது. நாங்கள் 11 பேர் வரை மீட்டோம். இவர்களுக்கு லேசான காயங்கள்தான் இருக்கிறது. மற்றபடி பயப்படும் அளவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
 ஆனால் நிலநடுக்கம் காரணமாக மின் இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதுதான் மிகப்பெரிய தலைவலி.

கருத்துகள் இல்லை: