hirunews.lk : பெருந்தோட்ட மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்க நடவடிக்கை - ஜனாதிபதி
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, அனைத்து காணிகளுக்குமான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்து, மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்டத்தின் காணிப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில், அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து தயாரிக்கும் அறிக்கையை பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு கிடைக்கச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையை சமர்பிக்கத் தவறினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலிய மாவட்டச் செயலக அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற நுவரெலிய மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்டபோது, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக