சனி, 14 மே, 2022

அதிமுக மாநிலங்கள் அவையில் நடிகை விந்தியா - செம்மலைக்கு வாய்ப்பு

கருணாநிதி குடும்பத்திற்கே தனி சிறை வேண்டுமே: நடிகை விந்தியா நக்கல் |  Karunanidhi family needs a separate prison: Actress Vindhya - Tamil Oneindia

zeenews.india.com :  நடிகை விந்தியாவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி : இ.பி.எஸ். ஆதரவில் முன்னேறுகிறார்
மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ள  திமுகவைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மூன்று பேரின் பதவிக்காலம் நிறைவுபெறுகிறது. இந்த 6 பேரை உள்ளடக்கி நாடு முழுவதும் காலியாகும் 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜுன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் ஜுன் 10 ம் தேதி தேர்தல் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.


சட்டப்பேரவையில் கட்சி சார்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் கட்சியான திமுகவுக்கு நான்கு உறுப்பினர்களும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும் நிச்சயமாகியிருக்கிறது. இந்த நிலையில் இரண்டு கட்சிகளிலும் உள்ள முன்னணி நிர்வாகிகள் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பெற அவரவர் சக்திக்கு ஏற்ப மேலிடத்தின் ஆதரவை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளும் திமுகவில் கடும்போட்டி நிலவி வரும் நிலையில் அதிமுகவில் சத்தமில்லாமல் மூன்று பேர் இறுதிப்பட்டியலில் இருப்பதாகவும் அதில் இருவரை அக்கட்சியின் தலைமை இறுதி செய்துவிட்டதாகவும் நம்பகத் தகுந்த தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி உச்சரிக்கும் முழக்கம்  “அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட  தலைமை பதவிக்கு வர முடியும்” என்பதே. அதனை நிரூபிக்கும் வண்ணம் இந்த தேர்தலில் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க இருப்பதாக இபிஎஸ் நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி பெண் வேட்பாளர் ஒருவருக்கும் மூத்த நிர்வாகி ஒருவருக்கும் ராஜ்யசபா பொறுப்பை வழங்க முடிவு செய்திருக்கிறது தலைமை. அப்படி வாய்ப்பு வழங்கப்படுபவர்கள் கோஷ்டி அரசியலில் சிக்காதவர்களாகவும், அனைவரும் ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலேயே அவரது முழு நம்பிக்கையை பெற்றவரும், திமுகவுக்கு எதிராக அனல் பறக்கும் பிரசாரத்தை பறக்க விட்டவருமான விந்தியா போயஸ்கார்டனின் செல்லப் பிள்ளையாகவே இருந்தார். இதனால் விந்தியாவுக்கு முக்கிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா மறைந்துவிட்டார்.

அவரது மறைவுக்கு பின் சில காலம் அமைதியாக இருந்த விந்தியா மீண்டும் தற்போது கட்சிப்பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சீட் கேட்டு கடைசி வரை காத்திருந்தார் விந்தியா. ஆனால் அப்போது வாய்ப்பு வழங்கப்படாததால் தற்போது ராஜ்யசபா பொறுப்பை விந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்பதில் தலைமை தீர்மானமாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல வழக்கறிஞர் இன்பதுரை அல்லது முன்னாள் அமைச்சர் செம்மலை இருவரில் ஒருவருக்கு மற்றொரு உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களாக இன்பதுரையையும், நடிகை விந்தியாவையும் பரிந்துரை செய்தால், உட்கட்சிக்குள் பெருமளவில் கொந்தளிப்பு வராது என இரட்டை தலைமை கருதுகிறது.

கருத்துகள் இல்லை: