ஞாயிறு, 8 மே, 2022

ஷவர்மா இறைச்சி உணவுக்கு தடை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

 Rajkumar R  -  Oneindia Tamil :    கள்ளக்குறிச்சி : ஷவர்மா உணவு வகையை தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது ஏன் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த அதிநவீன அவசர சிகிச்சை மையம் கட்டிடத்தை திறந்து வைத்து அதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகிய நேரில் பார்வையிட்டனர்.

அமைச்சர் ஆய்வு
அப்போது அதிநவீன அவசர சிகிச்சைக்கான உள் வலிகளுக்கான பிரிவை பார்வையிட்டதோடு, அங்கு முறையாக பணி செய்யாததால் மேல்தளத்தில் இருந்து தண்ணீர் கசிவதை நேரில் பார்வையிட்டு உடனடியாக சீர் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். மேலும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிறப்பு மருத்துவ மையத்தை பார்வையிட்ட பின் அங்கிருந்து நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி மரணம், மற்றும் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஷவர்மாவுக்கு தடையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஷவர்மா உணவு என்பது நமது உணவு இல்லை. நாம் பாரம்பரியமாக சாப்பிடும் உணவால் நம் உடலுக்கு எந்த கேடும் இல்லை. ஷவர்மா என்பது பழைய கறியை 4 நாள் 5 நாட்கள் வைத்து அதனை வெளியில் தொங்கவிட்டு சமைத்து சாப்பிடுவது தான் அது . மேலை நாடுகளில் சமைத்து சாப்பிடுவது சரி. ஏனென்றால் அங்கு இறைச்சிகளை பாதுகாப்பான முறையில் வைத்து குளிரூட்டப்பட்ட அதனை சமைத்து சாப்பிடுகின்றனர் .

ஷவர்மாவுக்கு தடை
ஆனால் அது போன்ற வசதிகள் தமிழகத்தில் இல்லை மேலும் கேரளாவிலும் இல்லை. இதனால் தான் கேரளாவில் புதியதான ஒரு நோய் மக்களை தாக்கி வருகிறது. அந்த நோய் தமிழகத்தில் வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தில் ஷவர்மா தடை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஷவர்மா உணவு தயாரிக்கும் உணவகங்களில் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்றார்.

தக்க நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், " கெட்டுப்போன மாமிசத்தை சாப்பிடக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில் கேரளாவில் பதப்படுத்தப்படாத இறைச்சிகளை சாப்பிட்டதால் தான் சிக்கலா என்ற புதிய நோய் கேரளாவில் மக்களை தாக்கி வருகிறது. அதற்கு இதுபோன்ற மாமிசங்களை சாப்பிடுவதே காரணம் என்பதால் தான் தமிழகத்தில் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: