புதன், 11 மே, 2022

ஆக்கிரமிப்பு அகற்றம் .. மார்வாடிகளின் அபார்ட்மெண்ட் நிலங்கள் பெரிதும் குளம், குட்டைகளாக இருந்த சீலிங் லேண்ட்கள்தான்...

May be an image of 1 person and outdoors

தமிழ் மறவன்  :  வேளச்சேரி முழுக்க பல இலட்சக்கணக்கான பார்ப்பனர்களின் குடியிருப்புக்கள் சதுப்புநில காடுதான்
சென்னையில் பெரிய, பெரிய அபார்ட்மென்ட்கள் மார்வாடிகளால் நிறைந்திருப்பவை அனைத்தும் ஒரு காலத்தில் குளம், குட்டைகளாக இருந்த சீலிங் லேண்ட்கள்தான்,
பல இலட்சங்களை கொட்டி பட்டா ஆவணங்களாக மாற்றப்பட்டிருக்கிறது.
அமைந்தகரையில் ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு என நூறாண்டுகளாக வசித்த மக்களை வெளியேற்றிய இடிப்புப் பணி SKYWALK எனும் அருண் ஓட்டல் கட்டிடம் வரை வந்து அதை இடிக்காமல் விட்டுவிட்டனர்.


இப்படி நிறைய நிகழ்வுகளை பட்டியலிட முடியும்
45 ஆண்டுகளுக்கு முன் பொது மக்களின் பயன்பாட்டில் இருந்த பெரிய ஏரி கிழக்கு தாம்பரத்தில் இருந்தது.
வயது முதிர்ந்தவர்கள் நன்றாக அறிவார்கள். அந்த ஏரியை முழுவதுமாக ஆக்கிரமித்துத்தான் ஜெயகோபால் கரோடியா என்கிற பள்ளியாக வானளாவிய கட்டிடங்களால் நிறைந்து நிற்கிறது.
பல சனாதனவாதிகளின் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வீடுகள் பல இலட்சம் ஏக்கர் ஆக்கிரமிப்புதான்!
ஆனால், அவையாவும் இன்று பட்டா நிலங்களாய் மாறியதெப்படி?
உழைக்கும் மக்கள் தங்கள் வீடு, நிலங்களுக்கான ஆவணங்களை இப்படி உருவாக்க இயலாது
ஏனெனில்..,
அரசு இயந்திரங்களின் டிஸைன் அப்படி!
உண்மையில், நேர்மையான செயலாக ஆக்கிரமிப்பு அகற்றம் இருக்க வேண்டுமானால் மேற்சொன்ன சென்னையின் பழைய வரைப்படத்தை எடுத்து காணாமல் போன ஏரி, குளம், கன்மாய், வாய்கால்களை மீட்கட்டும்
#முடியுமா???
உழைக்கும் மக்கள் வாழும நிலங்களையும்,
மேல்தட்டு வர்க்கம் பட்டாவாக மாற்றிக் கொண்ட நிலங்களையும் ஒப்பிட்டால் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலங்கள் மிக மிக மிக சொற்பமானவையே!
மாணவர்களின் தேர்வு நேரத்தில் இப்படி செய்கிறீர்களே அந்தப் பிள்ளைகள் எந்த மனநிலையில் சென்று தேர்வு எழுதும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?
மிக கவனமாகவும் மக்கள் பாதிக்கப்படாதவாறும் தலைவர் கலைஞர் அணுகியதைப்போல் மாற்று செயல்பாட்டோடு அணுக வேண்டிய பிரச்சனையை அதிமுக ஆட்சி எப்படி நடந்து கொண்டார்களோ அதே போல் நீங்களும் செய்வது நியாயம் தானா?
உண்மையில் கண்ணீர் மல்க இக்கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைந்தகரை பகுதி துவங்கி பல நகர் பகுதிகள்வரை இடிக்கப்பட்ட பல வீடுகள் மத்தியில் "அய்யோ திமுக ஆட்சி இருந்திருக்கக் கூடாதா??? நீங்கள் காப்பாற்றப்பட்டிருக்க மாட்டீர்களா?" என்று நான் கதறி ஒப்பாரி வைத்தது நினைவுக்கு வருகிறது.
மானமிகு முதல்வரே..!
தயவுசெய்து தேர்வுகாலம் வரை இடிப்பை தள்ளி வைத்து அம்மக்களிடம் பேசி நல்ல முடிவாக எடுக்க உதவுங்கள்
            - மு.தமிழ் மறவன்

கருத்துகள் இல்லை: