ஞாயிறு, 8 மே, 2022

விக்னேஷ் காவல் நிலைய மரணம்: ஆறு காவலர்கள் கைது

விக்னேஷ். படம்: ஊடகம்

tamilmurasu.com  :  சென்னை: சென்­னை­யில் விசா ரணைக் கைதி விக்­னே­ஷின் மர­ணம் தொடர்­பாக ஆறு காவலர் ­க­ளைச் சிபி­சி­ஐடி காவல்­துறை அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­னர்.
சென்னை கீழ்ப்­பாக்­கத்­தைச் சேர்ந்­த­வர் விக்­னேஷ். இவரைச் சோதித்­த­போது கஞ்சா வைத்திருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.
இதை­ய­டுத்து, சென்னை தலை­மைச் செய­லக காவல்­நி­லைய விசா­ ர­ணைக்கு அழைத்­துச் செல்­லப்பட்ட விக்­னேஷ், சிறை­யில் அடைக்கப்­பட்­டார். அதன்­பி­றகு அவ­ருக்கு வலிப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் இதை­யடுத்து மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட நிலை­யில் அவர் கடந்த 19ஆம் தேதி உயி­ரிழந்­து விட்டதா­க­வும் காவல்துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.


இது­தொ­டர்­பாக சிபி­சி­ஐடி காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வந்த நிலை­யில், விக்­னேஷ் தாக்­கப்­பட்­டது, மருத்­துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம் குறித்­து ெபண் காவ­லர் ஆனந்தி வாக்கு­மூ­லம் அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, தலை­மைச் செய­லக காவல்நிலைய எழுத்­தர் முனாஃப், காவ­லர் பவுன்­ராஜ், தலைமைக் காவலர் குமார், ஊர் காவல்படை காவலர் தீபக், இரு ஆயுதப்படை காவலர்கள் என ஆறு பேர் கைதாகியுள்ளனர். விசாரணையும் தொடர்கிறது.

இதற்­கி­டையே, “காவல்­துறை உங்­கள் நண்­பன் எனக் கூறி­விட்டு, நண்­பர்­க­ளாக இருக்­க­வேண்­டிய காவ­லர்­களே விசா­ர­ணைக் கைதி­களை அடித்­துக் கொலை செய்­வது எந்த விதத்­தில் நியா­யம்?” என தேமு­திக தலை­வர் விஜ­ய­காந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: